திண்டுக்கல்: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கி றார்கள் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி பேசினார்.
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இலவசப் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு கொடுத்து வருகிறார்.
ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றை விரலால் மண்டையைத்தான் சொறிய முடியும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார். பாஜகவின் கபட நாடகம் முடிவுக்கு வர இருக்கிறது, என்றார்.