Wednesday , September 18 2024
Breaking News
Home / Politics / திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு…

திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு…

Tamil News Today  Live updates: திருச்சியில் கலைஞர் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு

ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம்.

ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது. அந்த நகரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. கிருஷ்ணகிரி, தருமபுரி பொருளாதார வளர்ச்சி அடைய ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதமாக பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES