தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மின்சார வாரிய துறையின் நிதி நிலையும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியம்.
இந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தனது நிதி நிலையை மேம்படுத்தும், நிதி ஆதாரங்களைச் சிறப்பாக பயன்படுத்தும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் முக்கியமான முடிவை சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.இதன் படி Tangedco அமைப்பைத் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் – Tamil Nadu Power Generation Corporation Limited (TNPGCL) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் – Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) என இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.Tangedco அமைப்பை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் ஒரு நிறுவனத்தை அனல் மின் உற்பத்தியிலும் மற்றொன்று விநியோகத்திலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்து முடியும். இதன் மூலம் வருமானம், கடன் ஆகியவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும் என்பது தமிழ்நாடு அரசின் திட்டம். இந்த நிறுவன பிரிப்பு மூலம் மின்சாரத் துறையில் நிதி நிலையை மேம்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.Tangedco அமைப்பை 2 பிரிவுகளாகப் பிரிக்கத் தமிழ்நாடு சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்த நிலையில், இந்த புதிய கட்டமைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவிற்கும், வளர்ந்து வரும் தொழிற்சந்தைக்கு மத்தியில் நிலையான வளர்ச்சியை நிலைநிறுத்த இது அவசியமாகும்.இதேபோல் இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதைப் பசுமை எரிசக்தியில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு கூடுதலாகத் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited) என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.இந்த நிறுவனத்தை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் (TNEDA) இணைக்கப்பட்டுள்ளது என எரிசக்தி துறை செயலர் பீலா ராஜேஷ் ஜனவரி 24 அன்று வெளியிட்ட உத்தரவின்படி வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இந்த நிறுவனத்தின் வாயிலாக நீர் மின் உற்பத்தி, சோலார், காற்றாலை போன்ற பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீடுகளையும் ஈர்க்க முடியும்.தமிழ்நாடு அரசின் Tangedco கடனைக் குறைப்பதற்கும், அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இரண்டாக உடைக்கும் ஆலோசனையை 2023ல் முன்னணி ஆலோசனை நிறுவனமான EY இந்தியா வழங்கியது. இதன் அடிப்படையில் பல பிரிவுகளில் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி தான் இது.