இந்திய விடுதலைக்கு காந்தியடிகள் தலைமையில் போராடி, சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் நவீன இந்தியாவை உருவாக்கி பிரதமர் பொறுப்பு வகித்த பண்டித நேரு முதற்கொண்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய பெருமை இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மீண்டும் மூன்றாவது முறை அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சியமைந்த பா.ஜ.க.விற்கு மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் வாக்களித்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்று இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற வகையில் உரிமைக் குரல் எழுப்பி வருகிறார். அவரது பங்களிப்பு இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 78 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Home / Politics / தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்…
Check Also
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …