ஊடகத்தினருக்கு அழைப்பு 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (15.8.2024) வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து சேவாதள தலைவர் திரு. குங்பூ எஸ்.எக்ஸ். விஜயன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி. அவர்கள் பங்கேற்று சுதந்திர தின சிறப்புரையாற்ற உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பசுபதி தன்ராஜ் அவர்களின் சமுதாய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கப்படும். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
Home / Politics / 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு ….
Check Also
தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!
சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …