திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் மாளிகை உட்பகுதியில் நிறுவப்பட்டது ஆகும். சோழர் காலத்தில் செய்யப்பட்ட சிலை
அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் அரசு அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு 1997 இல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு மாற்றப்பட்டது. அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்திய நாகரிகத்தின் மண்பாண்டங்கள் அருங்காட்சியகத்தில் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது. உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுகால தொல்பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. அரிய ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள்,ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கி குண்டுகள், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்பு பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. வெளிப்புறத்தில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புற பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த சுமார் 45 இந்து மதம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.
சூழலியல் தொடர்பாக அருங்காட்சியகத்தில் அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது. இந்து மத கடவுள்களான கிருஷ்ணா, துர்க்கை, திருமால் மற்றும் நடராஜரின் காட்சிகளை காண்பிக்கும் அரிய தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தலைவர் விஜயகுமார், செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ் ,முகமது சுபேர், சந்திரசேகரன், இளங்கோவன், கமலக்கண்ணன் ,லிங்க ராஜன், முகமது இஸ்மாயில், யோகேஷ், சாமிநாதன், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்ட திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தினர் அருங்காட்சியகத்தினைகண்டு களித்தார்கள்.