திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவரிடம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடைகளை அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி விவசாய நிலங்களை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கோபால், மகளிரணி நிர்வாகிகள் அழகு, சந்திரகலா,கோகிலா, கமலா மற்றும் மாநில தலைவரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.