மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்
மேலும் இவ்விழாவில், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சந்தான குமார், மற்றும் கரிமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சுவாதி, தியாகராஜன், செல்வம்,மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரிக் கல்லூரி சேர்மன் அண்ணா துரை,மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரிக் கல்லூரியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கண் தானம் செய்வதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் இந்த பேரணியானது ஆரப்பாளையம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் தொடங்கி ஆரப்பாளையம் பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆரப்பாளையம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் நிறைவுற்றது இந்த பேரணியின் முடிவில் கண்தானம் செய்வதை வலியுறுத்தி அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்