இன்றைய ராசிபலன்கள்
ஏகாதசி
சந்திராஷ்டம ராசி இன்று பகல் 03.12 வரை ரிஷபம் பின்பு மிதுனம்
மேஷம் :
உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும்.
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
ரிஷபம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். பணியில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————————
மிதுனம்
ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் அமைதி காக்கவும். சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————
கடகம்
குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேம்படும்.
—————————————
சிம்மம்
கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயல்களை பல தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த ஆலோசனைகளை கேட்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : தடைகளை களைவீர்கள்.
பூரம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
—————————————
கன்னி
வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணி சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : தேவைகள் பூர்த்தியாகும்.
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
துலாம்
கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். செய்தொழிலில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அரசு வேலைகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : தடைகள் நீங்கும்.
—————————————
விருச்சகம்
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவோருக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர்களிடம் ஆதரவு பெருகும். சுப முயற்சிகள் கைகூடும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : ஆதரவு பெருகும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
—————————————
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமாக பேசி எண்ணிய காரியத்தை முடிப்பீர்கள். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூராடம் : ஆதரவுகள் பெருகும்.
உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
—————————————
மகரம்
உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், பணியில் மாற்றமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
கும்பம்
வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். சொந்த பந்தங்களிடம் கோபப் பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : பயணங்களில் நிதானம் தேவை.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
—————————————
மீனம்
உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். செய்தொழிலில் செய்யும் புதுவகை மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.
செய்தி : சிவா