இதனால் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் இன்று காலை 8 மணியளவில் இஸ்ரோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாற்றினார். இதையடுத்து பிரதமர் மோடி வெளியே சென்ற போது அவரை வழி அனுப்புவதற்காக, இஸ்ரோ தலைவர், சிவன், அங்கு வந்தார். அப்போது வருத்தத்தோடு இருந்த சிவனை தனது தோளில் சாய்த்துக்கொண்டு முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார் நரேந்திர மோடி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த கௌரவ் பந்தி என்பவர், தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள். மொத்த உலகமும் இஸ்ரோ சாதனையை பாராட்டி வருகிறது. எனவே சிவன் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவர், இவ்வாறு அழுதிருக்க தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார்.
இதை ரீட்வீட் செய்துள்ளார் குஷ்பு. அதில் அவர் கூறுகையில், நான் இதை மறுக்கிறேன். இந்த உணர்ச்சி என்பது புரிந்து கொள்ளக்கூடியது. குழந்தையை இழப்பது போன்ற ஒரு உணர்ச்சி அது. சந்திரயான் விண்கலத்தை ஒவ்வொரு பாகமாக உருவாக்கியவர்கள் அவர்கள். எனவே அது மாயமானதும் அழுகை வருவது மனித இயல்பு. இதில் இஸ்ரோ தலைவர் சிவன் மட்டும் விதிவிலக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் சில நெட்டிசன்கள் சிவன் அழவில்லை. வருத்தத்துடன்தான் இருந்தார் அவ்வளவுதான். மோடி அவரை அணைத்து ஆறுதல் கூறினார். சில ஊடகங்கள் அவர் கதறி அழுது விட்டதாக கூறி மிகைப்படுத்தின. அவர் கண்ணீர் மல்க நின்றது மட்டுமே உண்மை என்று கூறியுள்ளனர்.
news : yasar arafath