இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019
தீர்மானம்:
தலைமை :திரு.பாண்டியன்
வரவேற்புரை: திரு.கரிகாலன்
முன்னிலை : சிவாயம் திரு.சரவணன்,
போத்துராவுத்தன்பட்டி திரு.
ஆண்டியப்பன்
பொருள்:
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 2. மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
நன்றியுரை:
திரு.சரவணன்.
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றின் தண்ணீரை கொண்டு வர வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நாள். : 25-09-2019
இடம். : பஞ்சப்பட்டி பேருந்து நிலையம்
நேரம்.: காலை 10.00 மணி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி பஞ்சப்பட்டி ஏரி 1170 ஏக்கர் ஏரியின் கொள்ளளவு 1.8 டிம்சி. ஆக
காவேரி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் நிரப்னால் 25 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 300 மேற்பட்ட குக்கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கீழ்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் வருக, ஆதரவு தருக.