Sunday , November 10 2024
Breaking News
Home / தமிழகம் / பயங்கரமான கொலை…தூத்துக்குடி அருகே இளைஞர் வெட்டிக்கொலை : பதட்டம், போலீஸ் குவிப்பு

பயங்கரமான கொலை…தூத்துக்குடி அருகே இளைஞர் வெட்டிக்கொலை : பதட்டம், போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி அருகே நாணல்காடு பகுதியில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் இசக்கிபாண்டி (27). இவர் இன்று இரவு சுமார் 7 மணியளவில் நாணல்காடு பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கிபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண்பாலகோபாலன்,தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Courtesy Goes to https://theepandhamnews.com/?p=2851

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES