Thursday , September 12 2024
Breaking News
Home / கரூர் / கரூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் தலைமையில் புதிய மணல் குவாரிகள் அமையும் இடத்தில் ஆய்வு…

கரூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் தலைமையில் புதிய மணல் குவாரிகள் அமையும் இடத்தில் ஆய்வு…

கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) புதிதாக அமைக்க திட்டமிட்டு இருக்கும் புதிய மணல் குவாரிகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், சமூக அக்கறை உள்ள மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இன்று 09-07-2026 சனிக்கிழமை காலை 11.30 முதல் மதியம் 02.30 வரை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் வாங்கல். விஸ்வநாதன், சண்முகம், ராசேசுகண்ணன், விஜயன், வாங்கல் கந்தசாமி,
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜகுரு, லா பவுண்டேஷன் அமைப்பின் பொறுப்பாளர்கள் வாசுதேவன் மற்றும் சிற்றரசு, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் தோழர்.நாகராஜ்,
விடுதலை சிறுத்தைகள் கரூர் நகர பொருளாளர் ரகுமான், சாமானிய மக்கள் நலக் கட்சி பொறுப்பாளர் வேலு ஆகியோர் புதிய மணல் குவாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் ‌

இந்த ஆய்வின்போது, ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட பல்வேறு முறையில் பெறப்பட்ட
குவாரி தொடர்பான பல்வேறு அரசின் ஆவணங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுமம் ( SEIAA) கொடுத்துள்ள சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை, திருத்தி அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சுரங்க திட்டம் (Modified Mining Plan) ஆகியவைகளுடன்- தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள், தமிழ்நாடு தொழில்துறை வெளியிட்டுள்ள பல்வேறு அரசாணைகள் ஆகிய ஆவணங்களை முன்வைத்து, ஆவணங்களில் உள்ளவைகளுக்கும் நேரில் உள்ள உண்மை நிலையையும் ஒப்பீடு செய்து ஆய்வுப் பணி மேற்கொள்ளப் பட்டது.

இந்த ஆய்வின் போது, நேரில் கண்ட பல்வேறு விபரங்கள் அதிர்ச்சிகரமானதாகவும், எதிர்காலத்தில் நாடும் மக்களும் என்ன ஆவார்களோ என்ற அபாயத்தை தெரிவிக்கும் எச்சரிக்கையாகவும் இருந்து.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம், ஏற்கனவே புதிய மணல் குவாரி அமையும் இடங்களில் ஆய்வு செய்ய நேரில் செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை தெரிவித்து இருந்ததன் பேரில், இன்று காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டோம்

புதிய மணல் குவாரி ஆய்வின்போது நேரில் கண்டறிந்த உண்மைகள் சில:

நன்னியூர் புதிய மணல் குவாரி:

  1. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென் கிழக்கு எல்லைகளிலிருந்து, நேர் தெற்காக சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஊர் நத்தம், வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள் உள்ளன.
    (300 மீட்டர் தூரத்தில் வீடுகள் இருந்தால் குவாரி அனுமதி கிடையாது)
  2. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் வட மேற்கு எல்லையில் இருந்து, வடக்கு பகுதியில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் குமாரபாளையம் படுகையில், வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளது.
    (வனத்துறையின் ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் அமைக்க கூடாது)
  3. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென் கிழக்கு எல்லைகளிலிருந்து, சுமார் 200 மீட்டர் தென்கிழக்கில் நெரூர் கால்வாயில் மதகு (சுளூயிஸ்) உள்ளது.
    (குவாரி அமையும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டிட அமைப்பு இருக்கக் கூடாது)
  4. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் மேற்கு எல்லையில் இருந்து, மேற்கு பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உயர் மின் கோபுரம் டவர் பேஸ்மெண்ட் கட்டிடம் அமைத்து கட்டப்பட்டுள்ளது ‌
    (குவாரி அமையும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டிட அமைப்பு இருக்கக் கூடாது)
  5. அனைத்தையும் விட அதிர்ச்சிகரமாக, நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் இடமாக காட்டப்படும் இடங்களில், ஏற்கனவே மணல் முழுக்க அள்ளப்பட்டு மணல் எதுவும் இல்லாத நிலையும், தரையை ஒட்டியே ஆறு ஓடிக் கொண்டுள்ளது.
    (ஆனால் சுரங்க திட்டத்தில் மூன்று மீட்டர் உயரத்திற்கு மணல் உள்ளது எனவும் அதில் ஒரு மீட்டர் மணல் 4.90 ஹெக்டேர் பரப்பளவில் 48 ,000 கன மீட்டர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.)
  6. பொதுப்பணி துறையின்,
    கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டம் திருச்சி செயற்பொறியாளர், கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் இசைவாணை வழங்க கோரி கொடுக்கப்பட்ட ஆவணங்களில், ஆறுகளில் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் வகையில்
    கற்கள் நடப்பட்டதாக தனது கையெழுத்துடன் புகைப்படம் கொடுத்துள்ளார்.

ஆனால் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் அடையாள கற்கள் எதுவும் இல்லை.

பொதுப்பணித்துறையினர், அடையாளம் இட்டு காட்டப்பட்டதாக கூறப்படும்
கற்கள் அனைத்தும் காணாமல் போய் உள்ளது.

நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) புதிய மணல் குவாரி:

  1. நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்)
    புதிய மணல் குவாரி அமையும் தென்புறத்தின் நடுப்புற எல்லைகளிலிருந்து, நேர் தெற்காக சுமார் 200 மீட்டர் தூரத்தில் சேனப்பாடி ஊர் நத்தம், வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள் உள்ளன.

நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்)
புதிய மணல் குவாரி அமையும் 380 மீட்டர் நீளத்தின் தென்புறத்தின் மேற்கு எல்லைகளிலிருந்து, நேர் தென் மேற்க்காக சுமார் 200 மீட்டர் தூரத்தில் முனியப்பனூர் ஊர் நத்தம், வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள் உள்ளன.
(300 மீட்டர் தூரத்தில் வீடுகள் இருந்தால் குவாரி அனுமதி கிடையாது)

  1. நெரூர் வடக்கு மல்லம்பாளையம் புதிய மணல் குவாரி அமையும் வடக்கு எல்லையில் இருந்து, வடக்கு பகுதியில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் ஒடுவந்தூர் படுகையில், வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளது.

வடமேற்கு எல்லையில் இருந்து வட மேற்க்காக சுமார் 900 மீட்டர் தூரத்தில் மோகனூர் படுகையில் வனத்துறையின் ரிசர்வ் பாரஸ்ட் உள்ளது ‌
(வனத்துறையின் ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் அமைக்க கூடாது)

  1. நெரூர் வடக்கு மல்லம்பாளையம் புதிய மணல் குவாரி அமையும் தென் மேற்கு எல்லைகளிலிருந்து, சுமார் 400 மீட்டர் தென்மேற்க்கில் நெரூர் – முனியப்பனூர்- சேனப்பாடி மேலப்பாளையம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ஊராட்சி ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் நிலையங்கள் உள்ளன.
    (குவாரி அமையும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் குடிநீர் எடுக்கும் நிலையங்கள் இருக்கக் கூடாது)

4.அ). நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்)
புதிய மணல் குவாரி அமையும் இடத்தின் எல்லையில் இருந்து, அருகாமையிலேயே, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட நெரூர்- மோகனூர் இடையே 700 கோடியில் கதவனையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டமும், அதற்கான ஆய்வும் (ப்ரோபோசல்) நடைபெற்று உள்ளது.

ஆ).நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்)
புதிய மணல் குவாரி அமையும் இடத்தின் எல்லையில் இருந்து, வடக்குபுரத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட நெரூர்- ஒடுவந்தூர் இடையே தடுப்பணை அமைக்கும் திட்டம் (ப்ரோபோசல்) உள்ளது.

இ).நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்)
புதிய மணல் குவாரி அமையும் இடத்தின் கிழக்கு எல்லையில் இருந்து, அருகாமையிலேயே, சட்டசபையில் 12-03-2022 அன்று அறிவிக்கப்பட்ட நெரூர்- உண்ணியூர் இடையே உயர் மட்ட பாலம் திட்டம், (ப்ரோபோசல்) உள்ளது.

(புதிய மணல் குவாரி அமைக்கும் இடத்திற்கு அருகில் 500 மீட்டர் தூரத்திற்குள் குடிநீர் அமைக்கும் திட்டங்களோ அல்லது நிரந்தரமான கட்டிடம் அமைக்கும் திட்டங்களாக இருந்தால் புதிய மணல் குவாரி அமைக்க கூடாது)

  1. அனைத்தையும் விட அதிர்ச்சிகரமாக, நெரூர் வடக்கு (மல்லம் பாளையம்) புதிய மணல் குவாரி அமையும் இடமாக காட்டப்படும் இடங்களின் பெரும்பான்மையான வடக்கு புறப்பகுதியில், ஏற்கனவே மணல் முழுக்க அள்ளப்பட்டு மணல் எதுவும் இல்லாத நிலையும், தரையை ஒட்டியே ஆறு ஓடிக் கொண்டுள்ளது.
    (ஆனால் சுரங்க திட்டத்தில் மூன்று மீட்டர் உயரத்திற்கு மணல் உள்ளது எனவும் அதில் ஒரு மீட்டர் மணல் 4.94 ஹெக்டேர் பரப்பளவில் 48 ,000 கன மீட்டர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.)
  2. பொதுப்பணி துறையின்,
    கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டம் திருச்சி செயற்பொறியாளர், கரூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் இசைவாணை வழங்க கோரி கொடுக்கப்பட்ட ஆவணங்களில், ஆறுகளில் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் வகையில்
    கற்கள் நடப்பட்டதாக தனது கையெழுத்துடன் புகைப்படம் கொடுத்துள்ளார்.

ஆனால் குவாரி செயல்படும் இடத்தை காட்டும் இடங்களில் இவர்கள் கொடுத்துள்ள புகைப்படங்களில் காட்டப்பட்டவாறு அடையாள கற்கள் எதுவும் இல்லை.

மேலும், தென்புறப் பகுதியில் மட்டும், அடையாளக் கற்கள் நடப்பட்டுள்ளது மற்ற மூன்று பகுதிகளிலும் குவாரியை அடையாளம் கற்கள் காணப்படவில்லை

அரசின் பல்வேறு கனிமச்சட்ட விதிகள் இவ்வாறு பல்வேறு வகையில் மீறப்பட்டு தான் இந்த குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

@ ந. சண்முகம்
சு.விஜயன்
சு. ராசேசு கண்ணன் ஒருங்கிணைப்பாளர்கள்,
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்

97919-78786

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES