Sunday , November 3 2024
Breaking News
Home / இந்தியா / தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா பேரணி…

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா பேரணி…

நாள்: 17.09.2022 சனிக்கிழமை

நேரம் காலை 9:30 மணிக்கு

இடம்: திருமாநிலையூர் பெரியார் சிலை

தன்மான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே!

ஒவ்வொரு தமிழனும் இன்னும் சரியாக சொன்னால் மனித பற்று கொண்ட ஒவ்வொரு மனிதரும் கொண்டாட வேண்டிய தலைவர் தந்தை பெரியார் ஆவார். அவர் ஆற்றிய சமூக தொண்டால் தமிழ் சமூகம் பெற்ற பலன்கள் பல உண்டு.

அவற்றில் ஒன்று மட்டும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பெரும்பாலும் பார்ப்பனர்களை நிரம்பி வழிந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத சாதியினரும் அவற்றில் இடம்பெற வேண்டி, தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதிக் கொள்கையை கையில் எடுத்ததன் பலனாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம் பெற்று முன்னேற்றம் கண்டனர்.

இன்றைக்கு தமிழ்நாடு அடைந்துள்ள கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தந்தை பெரியாரின் இட ஒதுக்கீடு என்னும் சமூக நீதிக் கொள்கை முக்கிய காரணமாகும். அவர் மறைந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் ஆனாலும் ,அவர் விதைத்த சிந்தனையால் தமிழ் மண் பக்குவப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே தான் இங்கு காவிகள் கால் வைத்தவுடன் கத்துகிறார்கள்… கதறுகிறார்கள்…

எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் மக்களின் மீது திணித்து இந்திய துணைக்கண்டம் முழுவதையும் பார்ப்பன சனா தன சக்திகள் காவிமயமாக்கி வருகின்றனர். அதற்கு ஒன்றிய பார்ப்பன பாஜக மோடி அரசு அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் பெரியார் என்னும் பேராயுதம் ஏந்தி தமிழ்நாட்டில் காவிமயமாக்களுக்கு முடிவு கட்டுவோம்… வாரீர்….

ஒழியட்டும் பார்ப்பன சனாதனம்!!! ஓங்கட்டும் சமூக சமத்துவம்!!!

– இவன் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கரூர். (9442354237, 9790529999)

Bala Trust

About Admin

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES