Thursday , September 12 2024
Breaking News
Home / தமிழகம் / உருமு தனலெட்சுமி கல்லூரியில் அண்ணல்காந்தியடிகள் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி

உருமு தனலெட்சுமி கல்லூரியில் அண்ணல்காந்தியடிகள் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி சட்ட உதவி மையம் முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி வாழ்க்கைப் புகைப்படக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கண்காட்சியினை துவங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் அஞ்சல் தலைகள் மற்றும் புகைப்படங்களை காட்சிப்படுத்தினார். உதவி பேராசிரியர் விஜய சுந்தரி காந்திய சிந்தனைகள் குறித்து பேசினார். வணிகவியல் துறைத் தலைவர் ஜெனட்ராஜகுமாரி, மாலதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி சட்ட உதவி மைய ஒருங்கிணைப்பாளர் வசந்தா நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

கண்காட்சியில் கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம்மையாருக்கும் மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை போர்பந்தரில் பயின்று ராஜ்காட் கத்தியவார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் ஆல்பர்ட் உயர்நிலைப் பள்ளி என பெயர் மாற்றம் பெற்றது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். 1889 முதல் 1893 காலங்களில் லண்டனில் சட்டம் பயின்றார். 1893 – 1904 காலங்களில் தென் ஆப்ரிக்கா செல்லும் போது அங்கு இருந்த நிறவெறி அதிர்ச்சியை தந்தது. பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவேற்றுமையால் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நிகழ்வும் நடைபெற்றது. அகிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் தென்னாப்பிரிக்காவில் 1904-1914 காலங்களில் நடைபெற்றது. 1915 காந்தி இந்தியா வந்தடைந்தார்.

இரவீந்திர நாத் தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். 1922ல் காந்திக்கு ஆறாண்டு சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டு 1924 ஆண்டு விடுதலை அடைந்தார். டிசம்பரில் பெல்காமில் தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1930 – 1942 காலங்களில் உப்பு வரிக்கு எதிராக சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். 1930 மார்ச் மாதம் காந்தி 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அரபிக் கடலின் கரையோரத்தில் இருந்த தண்டிக்கு 241 மைல் தூர பாதயாத்திரையை மேற்கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் நாள் தண்டியை அடைந்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் ஒரு கையளவு உப்பை உலர்ந்த உப்பங்கழியிலிருந்து எடுத்து உப்புச் சட்டத்தை மீறினார். 1939ல் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது.

1947 மார்ச் பிரிட்டிஷ் அரசு பிரபு மவுண்ட்பேட்டனை வைஸ்ராயராக இந்தியாவிற்கு அனுப்பி ஆகஸ்ட் 15 விடுதலை அளிப்பதாக முடிவெடுத்தது. 1948 ஜனவரி 30 தேதி அன்று பிர்லா மாளிகைக்கு மனு, அபா இரண்டு பேத்திகளின் தோள்கள் மீது கரங்களை வைத்து மாலை 5.13 மணிக்கு பிரார்த்தனை இடத்திற்கு வந்தார். கூட்டத்தில் நாது ராம் விநாயக கோட்சே காந்தி மார்பில் மூன்று முறை சுட்ட போது ஹேராம் எனக் கூறி கீழே விழுந்தார். உடல் தகனம் செய்யப்பட்ட ராஜ்காட்டில் காந்தியின் சமாதியில் கடைசி வார்த்தையான ஹேராம் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. 1869 – 1948 மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் வகையில் அரிதான புகைப்படங்களை மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகாசிரியர் விஜயகுமார் காட்சிப்படுத்தி விளக்கினார்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES