மதுரை உத்தங்குடியில் உள்ள ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு குழந்தைகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரீத்தி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று இந்த முகாமில் நோக்கத்தையும் மருத்துவமனையின் பங்களிப்பையும் விளக்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹேமா சிவகுமார், எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமாரி, டாக்டர் விஜயசரவணன் உள்பட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Home / தமிழகம் / ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் – மதுரை
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …