சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருவோர்கள், பாக்கு, புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை மென்று மருத்துவமனை வளாகத்தில் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு உள்ளேயும் துப்பி வைக்கின்றனர். இது அங்குள்ள நோயாளிகளை பாதிப்பது மட்டுமின்றி, நோயாளிகளை பார்க்க வருவோரையும், பாதிக்கிறது. மேலும், மருத்துவமனைக்கு குழந்தைகளும் வருவதால், அவர்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம், இதை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு:
இளைஞர் குரல் செய்திகளுக்காக சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து,
R விமல்குமார்……