Thursday , September 12 2024
Breaking News
Home / தமிழகம் / மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி

மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி

மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி இல்லாததால் அவதிப்பட்ட வந்த மருத்துவ கல்லூரி மாணவருக்கு உளுந்தூர்பேட்டையில் உதவும் உள்ளங்கள் ரூபாய் 50 ஆயிரத்தை திரட்டி அழகிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்புர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி 50 வயதான கூலி வேலை செய்து வரும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் கூலித்தொழிலாளி சக்கரவர்த்தியின் மகன் மணிகண்டன் நல்ல முறையில் படித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றார் தொடர்ந்து மாணவர் மணிகண்டன் தான் படித்த பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதோடு அடுத்தடுத்து நடைபெற்ற சிறப்பு தேர்வு மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் டாக்டர் படிக்க இடம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்ந்த மணிகண்டன் அங்கு தொடர்ந்து படித்து வருகிறார் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியோடு கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கட்டி படித்து வந்த நிலையில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து கல்வி கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலை இருந்து வந்தது.இதையடுத்து மாணவன் மணிகண்டன் இந்த நிலை தொடர்பாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல் பரவியது இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் உள்ள பல்வேறு சமூக நல அமைப்பினரும் உதவும் புலிகளும் சேர்ந்து ஆயிரம் இரண்டாயிரம் என அவர் அவர் பங்கிற்கு ரூபாய் 44 ஆயிரத்து 500 ஒன்று சேர்த்து அந்த மாணவனின் மற்றும் அவரது பெற்றோர்களிடம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது. மேலும் இந்த மாணவியின் கல்விக்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனது பங்கிற்கு ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமாக வழங்கியுள்ளார். அதேபோல் மாணவனின் தொடர்ந்து கல்வி பயில விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மாணவனுக்கு தொடர்ந்து கல்வி பயில வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES