நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள்.
இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம்.
விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யை பிடிக்காது, ஆனா அவரோட டான்ஸ் பிடிக்கும் என சொல்லும் ரசிகர்களும் கணிசம்.
அந்த அளவுக்கு நடனத்தில் வெளுத்து வாங்குவார் விஜய். இந்நிலையில், விஜய்க்கு பல படங்களில் நடன இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர் மாஸ்டர்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “தெறி படத்தில் வரும் ஜீத்து ஜில்லாடி பாடலுக்கு ஓவர் பில்டப் எல்லாம் வேண்டாம் சிம்பிளாக ஒரு இன்ட்ரோ வைங்க” என்று விஜய் அவர்கள் கூறினார். அதனால, நாங்க சிம்பிளா தான் பண்ணோம். ஆனால், ஸ்க்ரீன்ல பாக்கும் போது வேற லெவல்ல இருந்துச்சி என தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.