The great temple at tanjore…
தஞ்சை பெரியகோவில் பற்றி ஏராளமான நூல்கள் தற்காலத்தில் வெளிவந்துள்ளன.
கோவில் அமைப்பு, கட்டுமானம், கல்வெட்டு, சிற்பங்கள், தொழில்நுட்பம், என்று பெரியகோவிலைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன..
மேற்கண்ட விபரங்கள் அடங்கிய
பெரியகோவிலைப்பற்றிய முதல் நூல் எது.?
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே இந்த நூல் வெளிவந்தது.
1935 ஆம் ஆண்டு.. இந்தியத் தொல்லியல் துறையால் இந்நூல் வெளியிடப்பட்டது.
நூலின் பெயல்…
” The great temple at tanjore ”
நூல் வெளியான ஆண்டு 1935.
தனியாக ஒரு கோவிலைப்பற்றி மட்டும் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட நூல் இது..
கோவில்.. கல்வெட்டு..
படங்கள். தொல்லியல் விபரங்கள்.. என்று முழுமையான தரவுகள் அடங்கிய நூல்..
இன்றளவும் கோவிலைச்சுற்றும் தவறானத் தகவல்களை அன்றே மறுத்துள்ளார்கள்.
ஸ்ரீவிமானத்திற்கு சிகரக்கல் கொடுத்த அழகி என்னும் கதையை சொல்லும் பெருவுடையார் உலாப் பாடல்கள்,
அம்மையார் நிழலில் யாம் அமர்ந்தோம் என்று கூறும் மாயூரப்புராணம்..
தஞ்சை தளிகுளத்தார் என்று பாடும் அப்பர் பாடல்..
தஞ்சை மாமனிக்கோவிலே என்று பாடும் திருமங்கையாழ்வார்..
இதுபோன்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளனர் இந்நூலில்.
2015 ல் தஞ்சை பெரியகோவிலின் ஸ்ரீவிமானத்தில் வடபுறச்சுவற்றில் உள்ள அந்த ஐரோப்பிய தொப்பிக்காரன் சிற்பம் வெகுபிரபலம். 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேருடன் தொடர்பு கொண்ட ராஜராஜன் என்று வாட்சப் வதந்தி இன்றும் சுற்றுகிறது..
இதற்கானப் பதிலை 1935 லேயே கூறிவிட்டார்கள். அது நாயக்கர் கால சுதை வடிவம் என்று குறிப்பு எழுதியுள்ளனர்.
கல்வெட்டுகளை சிறப்பான முறையில் திறனாய்வு செய்துள்ளனர்..
தமிழ் திருப்பதியம் பாட இராஜராஜன் கொடுத்த ஓதுவார் 48 பேரில் யார் யாருக்கெல்லாம் திருஞானசம்பந்தர் பெயர் வருகிறது.? எத்தனை முறை வருகிறது..? என்ற ரீதியில் ஆய்வு செய்துள்ளனர்.
இந்நூலில் உள்ள புகைப்படங்கள் 1935 க்கு முன்பாக எடுக்கப்பட்டவை. இப்படங்களைப் பார்க்கும் போது அன்றைய கோவிலின் நிலையை அறியமுடிகிறது.
1798 ல் ஆங்கிலேயர் ஒருவர் வரைந்த தஞ்சை பெரியகோவிலின் ஓவியம் வெகு அழகாய் இருக்கிறது.
சில புகைப்படங்கள் அபூர்வமானவை.
திருவிசலூர் கோவிலில் இராஜராஜன் தன் தேவியருடன் லிங்கத்தை வணங்கும் தோற்றத்தில் இருக்கும்
ஒரு சிற்பம் உள்ளது.
கோவில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இச்சிற்பம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது..
மீட்டுருவாக்கம் செய்வதற்கு முன் இச்சிற்பம் எவ்வாறு இருக்கும் ..? அப்புகைப்படத்தை இந்நூலில் காணலாம்.
திருவிசலூர் சிற்பத்துடன், மேலும் ஒரு புகைப்படம் போட்டு இராஜராஜன் தன் மனைவியருடன் என்று குறிப்பிட்டுள்ளனர். தஞ்சையில் இருந்த இச்சிற்பம் தற்போது அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும் தகவல்.
வியப்பு.. அருங்காட்சியகத்திற்கு பலமுறை சென்றுள்ளோமே.. இச்சிற்பத்தை பார்த்ததில்லையே…
அருங்காட்சியகத்திற்கு சென்று படங்கள் எடுத்த பல நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். இதை படம் எடுக்கவில்லை என்றார்கள்..
சமீபத்தில் தஞ்சைசென்றபோது , முதலில் அருங்காட்சியம் சென்று அச்சிற்பத்தை படம் எடுத்தாகிவிட்டது.
இவ்வாறான பலத் தொல்லியல் தரவுகளைக்கொண்ட ஒரு நூல்..
இந்நூல் வேண்டுவோர் விருப்பம் தெரிவியுங்கள். வாட்சப் எண் பதிவிடுங்கள்.
உடனே அனுப்ப இயலாது.
சற்று தாமதமானாலும்
நிச்சயம் அனுப்பிடுவேன்..
அன்புடன் ..
மா.மாரிராஜன்.
நூல் வேண்டுவோர் 9444652578
என்ற வாட்ஸ்அப் எண்ணில் விருப்பம் தெரிவியுங்கள்..