Thursday , September 12 2024
Breaking News
Home / தமிழகம் / என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்

என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்

என்னதான் நடக்குது எஸ்ஆர்எம்மில்? துப்பாக்கி, பட்டா கத்தியுடன் மோதி கொண்ட மாணவர்கள்.. பொதுமக்கள் ஷாக்.

சென்னை: சென்னையை அடுத்த எஸ்ஆர்எம் தனியார் காலேஜ் மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் ரகளை செய்த வீடியோ அதிர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது.

காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபலமான காலேஜ்களில் ஒன்று எஸ்ஆர்எம்.. இந்த பல்கலையில், பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து இங்கு தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை மாணவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக எம்பிஏ 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் காலேஜ் கேன்டீனுக்குள்யே அடித்து கொண்டனர்.
இரு பிரிவினர் இடையே நடந்த மோதலில் எப்படியும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு குரூப் மாணவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது.. இன்னொரு குரூப் மாணவர்கள் கையில் வீச்சரிவாள் இருந்தது.. ஆளுக்கு ஒரு வீச்சரிவாளை எடுத்து கொண்டு எதிர்தரப்பை தாக்கி கொண்டனர்.
இதனை பார்த்த சக மாணவர்களும், கேன்டீனில் சாப்பிட்டு கொண்டிருந்த ஊழியர்களும் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இவை எல்லாவற்றையும் காலேஜ் மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. இந்த பதிவு வேகமாக பரவியது.. இதனை பார்த்த வண்டலூர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. துணை எஸ்பி உட்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் சுட்ட மர்ம நபர்.. ஆம் ஆத்மி உறுப்பினர்.. போலீஸ் ஷாக் தகவல்!
இதில் குறிப்பாக, துப்பாக்கி வைத்திருக்கும் மாணவர், பட்டா கத்தியுடன் சண்டை போடும் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மறைமலைநகர் போலீசார் கேம்பஸில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகராறு ஏன் நடந்தது? முன்விரோதமா? காதல் விவகாரமா? வேறு என்ன காரணம் என விசாரித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த மோதலால் மாணவர் ஒருவருக்கு பலமான அடி ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன… காலேஜ் கேன்டீனில் மாணவர்கள் மோதி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதே யூனிவர்சிட்டியில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு ரவுடி காலேஜ் கேம்பஸில் பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை.. ஏற்கனவே இதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகேஷ் என்ற மாணவனையும் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. இப்போது படிக்கும் பிள்ளைகளிடம் காலேஜ் கேம்பசுக்குள்ளேயே துப்பாக்கி வந்துள்ளது பெரிய அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல தற்கொலைகள் இந்த காம்பசுக்குள் நடந்துள்ளன.. இது சம்பந்தமான விசாரணைகள் நடந்து வந்தாலும், அவை எந்த நிலையில் இருக்கின்றன என்று இன்னும் தெரியவில்லை.. பிள்ளைகளை நம்பி அனுப்பும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதில், செங்கல்பட்டு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் சகஜமாக இங்கு படிக்கும் மாணவர்கள், ரவுடிகளிடம் நிறைய காணப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என்பதே மக்களின் உடனடி கோரிக்கை ஆகும்.

 

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES