Wednesday , September 18 2024
Breaking News
Home / இந்தியா / 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…

பெண்கள் மட்டுமல்ல..!

ஆண்களும்..
35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்..

30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை

அவரே Post graduate degree முடித்த பின் இந்தியாவில் வங்கியில் வேலை . ஆசிரியை.. சென்னை, பெங்களூரீல் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் விரும்புவதில்லை. பெண் வீட்டாரும் விரும்புவதில்லை..

வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், அவர்கள் போல் இருக்க வேண்டும்.

1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.

ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.
சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்…

1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.

1980க்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.

2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.

ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.

இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..

1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம் உணவு: ராகி, கம்பு, சோளம்.

1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22 உணவு: அரிசி .அரிச மா மரவள்ளி

1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25 உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.

2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்.. உணவு: துரித உணவு.

2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.

எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.

சரியான கல்வியறிவு, நல்லொழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்…

வாழ்க்கை இனிமையாகும்…

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES