Sunday , October 13 2024
Breaking News
Home / இந்தியா / அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்…

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்…

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்…

*இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கில் நாம் கடை பிடிக்க வேண்டிய சிலவற்றை உங்களுக்கு கூறுகிறேன்.*

*தற்போது நமக்கு மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ள மொபைல் போன்களை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் மொபைல் சர்வீஸ் கடைகள் கிடையாது. மேலும் சார்ஜர்கள் ரிப்பேர் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல் கடைகளும் கிடையாது.*

*மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிவி ரீசார்ஜ் முடியும் முன்னரே ஆன்ராய்டு மொபைல் மூலம் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்துவிடுங்கள்.*

*உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேலை அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தால் யாருக்கும் தெரியாமல் போய்விடும்.*

*அதேபோல் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களான பேன், மிக்சி, கிரைண்டர், டிவி, லைட்ஸ், இண்டக்சன் ஸ்டவ், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை கவனமாக கையாளுங்கள் ஏனென்றால் மின்சாதன கடைகளும் இல்லை, சர்வீஸ் எஞ்சினியர்களும் வர இயலாது.*

*வீட்டில் உள்ள இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை வாரம் ஒரு முறை சிறிது நேரம் இயக்கி பாருங்கள். ஒருவேலை ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் சர்வீஸ் எஞ்னியர் கிடைக்கமாடார். நம் அவரச தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விடும்.*

*வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.*

*வங்கி கடன், வாகன கடன், வீட்டு கடன், பள்ளிக் கட்டணம், மின் கட்டணம், வரி உள்ளிட்டவைகள் குறித்து கவலைப்படவேண்டாம். நிச்சயம் அரசு சலுகைகள் வழங்கும்.*

*குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் வீட்டை விட்டு வெளியே விளையாட அனுமதிக்காதீர்.*

*சலூன் கடைகள் இருக்காது என்பதால் முடிந்தவரை செல்ப் சேவிங் செய்துகொள்ளுங்கள். இல்லை என்றால் சாமிக்கு மாலை போட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்.*

*வீட்டில் சமைக்க முடியவில்லை அல்லது உணவு தேவைப்பட்டாலோ மொபைல் மூலம் ஆன்லைனில் தேடி அருகில் உள்ள ஹோட்டலின் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டு சென்று வாங்கி வாருங்கள்.*

*திருமணம், இறுதிச் சடங்குகளில் கண்டிப்பாக பங்கேற்கும் நிலை ஏற்பட்டால் முடிந்தவரை தகுந்த பாதுகாப்புடன் கலந்து கொள்ளுங்கள்.*

*நட்புடன் உங்கள் அன்புக்குரிய*
*தமிழன் வடிவேல்.*
*பத்திரிகையாளர்.*
*9445272820.*

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES