கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு பற்றாக்குறை இல்லாத சூழலை உருவாக்கும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரத்த தான முகாம்
இன்று (20.4.2020) காலை 10 மணிக்கு
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனது ரத்தத்தை தானமாக வழங்கி இந்த முகாமை துவக்கி வைக்க உள்ளார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் இன்று முகாமில் பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம்…
அனைவரும் வருக!
இளைஞர் குரல் சார்பாக இந்த சிறப்பான தொடக்கத்தை தொடங்கும் கரூர் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.