9.6.2021 புதன் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
உணவு தயாரிப்புக்கு சிறப்பாக பணியாற்றிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்திர அன்புவழி அறக்கட்டளை) திரு வை.க.முருகேசன், ஜல்லிபட்டி, Dr.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த திரு த.கௌசிகன், திரு தி.பாலுசாமி, திரு.தினகரன், திரு.பாலா மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவை சேர்ந்த திரு. இரா. பாலமுருகன். சேவை உள்ளம் கொண்ட திரு, பி. கார்த்திக்நிர்மலா, ஜல்லிபட்டி, ஊர்புற நூலகர் திரு இரா. சுப்பிரமணி, பாரத பொது தொழிலார்கள் நல சங்க திரு இரா. சக்திவேல், மற்றும் திரு, வீ. லோகநாதன், திரு. S. மாரியப்பன், திரு, மோகன் என அனைவரும் சேர்ந்து பொது மக்களுக்கு உணவு வழங்கினர்.
அனைத்து இந்திய புரட்சிகர இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் சார்பாக திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி அவர்கள் கலந்து கலந்துகொண்டு மக்களில் ஒருவராக அதே இடத்தில் உணவருந்தினார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் நன்கொடை அளித்த நல் உள்ளங்களுக்கும் பாலா அறக்கட்டளை (www.balatrust.in) சார்பாக, பாலா அறக்கட்டளை செயலாளர் முனைவர் திரு. பாலமுருகன் பி.இ அவர்கள் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.