முருங்கைக் கீரை துவையல் செய்முறை:
தேவையான பொருட்கள்:
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய்
செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்…
அதேபோல் முருங்கை இலையையும் தனியாக வதக்கி வைத்துக் கொள்ளவும்…
மிக்ஸி அல்லது ஆட்டுக் கல் துணி கொண்டு வதக்கி வைத்த மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து எடுத்துக்கொண்டால் முருங்கை இலை துவையல் தயார்.
குறிப்பு: முருங்கை இலை துவையல் சூடான சாதத்திற்கு சுவையாக இருக்கும்.