பூந்தமல்லி அருகே சொரன்சசேரி என்ற பகுதியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் முதல் முயற்சியாக பனை ஓலையில் இந்திய தேசிய கொடியினை தமிழ் கொடி என்பவர் தயாரித்து உலக சாதனை படைத்து . லிங்கன் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இந்த சாதனையை அமைப்பின் தலைவர் Dr.ஜோசப் இளந்தென்றல் அங்கீகரித்து சான்றிதழ் வாழங்கினார். இந்த நிகழ்வில் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் குமார் அடையாள அட்டை வழங்கி கவுரவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி Dr. செல்வம் உமா அவர்கள் உலக சாதனையை ஆய்வு செய்தார்.காலை 8:10 மணி அளவில் துவங்க பட்ட இந்த முயற்ச்சி சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த PFA அமைப்பிற்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கபட்டது.இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை அதிகாரி பாலசந்தர், சதேசி இயக்க தலைவர் குமரி நம்பி, வழக்கறிஞர் மோசஸ் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் ஸ்டீபன் சீனிவாசன் சாலமன் தினேஷ் ஹரிஹரன் இலக்கியா சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …