கரூர்.15.09.19
ரயிலில் தவற விட்ட ₹ 2,50,000 மீட்டு ஒப்படைப்பு.
நேற்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு நெய்வேலியில் இருந்து மங்களூர் செல்லும் பயணி தனது பணம் ₹ இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தனது கை பையில் வைத்துவிட்டு உணவருந்த திருச்சி சந்திப்பில் இறங்கியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் மங்களூர் அதிவிரைவு வண்டி திருச்சி சந்திப்பில் இருந்து புறப்பட்டு விட்டதால் பதட்டமடைந்த பயணி வெளியே வந்து வாடகை வண்டியில் கரூர் நோக்கி புறப்பட்டார்.வண்டியின் உரிமையாளர் குளித்தலை சார்ந்தவர் எனவே அவர் குளித்தலையில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகர செயலாளர் திரு.கடம்பை பிரபு அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் அவரது நண்பர் கணேஷ் அவர்களும் குளித்தலை சந்திப்பிற்கு சென்ற பொழுது அங்கு தொடர்வண்டி நிற்காமல் கரூர் நோக்கி சென்றதால் குளிதலை நகரச் செயலாளர் திரு கடம்பை பிரபு அவர்கள் மாநில துணைச் செயலாளர் திரு க.முகமது அலி அவர்களுக்கு தகவல் அளிக்க, கரூர் நகர செயலாளர் திரு லோகேஷ் அவர்களும் கடம்பை பிரபு அவர்களின் நண்பர் கார்த்திக் அவர்களும் உடனடியாக கரூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள ரயில்வே காவல் அதிகாரிகள் உதவியுடன் பணம் இரவு 11.30 க்கு கரூரில் பத்திரமாக மீட்கப்பட்டு உரியவரிடம். ஒப்படைக்கப்பட்டது.