பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141.வது பிறந்ததினம் இன்று
ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல
இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன்
சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை
வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன்
தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி விந்தைகள்பல புரிந்திட்ட வீரத்தமிழன்
மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி சாதிமதமற்ற சமதர்ம சமுதாயம் கண்டிட சாகும்வரை உழைத்திட்ட உண்மை உயிர்
நினைத்திடுவோம்