உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
அதுமட்டும் இல்லாமல் நடிகை பிரியங்கா சோப்ராவை சமூக வலைத்தளங்களில் ‘சர்ச்சை நாயகி’ என்று கூட சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் அவரை குறித்துப் அளவிற்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் அமெரிக்காவில் 144 கோடி ரூபாய்க்கு ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. அனைவரும் ‘அடேங்கப்பா’ என்று வாயை பிளக்கும் அளவிற்கு வீட்டின் விலை உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிரியங்கா சோப்ரா குறித்து இணையங்களில் வரும் செய்திகளில் இது தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.