Thursday , September 12 2024
Breaking News
Home / சினிமா / தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் – மஞ்சு பார்கவி என்ற அவரது உறவுக்கார பெண்ணுக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் குறித்து வரும் செய்திகளை மறுத்து வந்த யோகி பாபு, இன்று காலை திடீரென திருமணம் செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

யோகி பாபுவுக்கு திருமணம் நடைபெற்ற செய்தி அறிந்ததும் டுவிட்டரில் #YogiBabu என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. வரும் மார்ச் மாதம் சென்னையில், சினிமா பிரபலங்கள் பங்கு பெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. யோகி பாபு தனது திருமணம் குறித்த அறிவிப்பை திருமண புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்தார். அதற்கு கீழே கமெண்ட் பாக்ஸில் நடிகை கஸ்தூரி யோகி பாபுவுக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். யோகி பாபுவின் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிகில் படத்தில் யோகி பாபுவுடன் நடிகர் விவேக் காமெடியில் கலக்கி இருந்தார். இந்நிலையில், யோகி பாபுவின் திருமணம் குறித்த அறிவிப்பை அறிந்த நடிகர் விவேக், தனது டுவிட்டர் பக்கத்தில், நண்பர் யோகிபாபுவின் மணவிழா இனிது நடை பெறவும், அந்த இணை பல்லாண்டு மகிழ் வாழ்வு வாழவும் வாழ்த்துகிறேன் என வாழ்த்தியுள்ளார்.

யோகிபாபுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bala Trust

About Admin

Check Also

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES