Wednesday , September 18 2024
Breaking News
Home / வரலாறு மீட்டுருவாக்கம் / விழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் – பகவதிநாள்

விழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் – பகவதிநாள்

பகவதிநாள்

தைப்பூசம் திருவிழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் ஒவ்வொரு ஆண்டும் வருவது வழக்கம் இந்த நாளை சோழர்கள் பாண்டியர்கள் சேரர்கள் பெரு விழாவாக கன்னி பகவதிக்கு எடுத்து அடியார்க்கு உணவளித்து வந்துள்ளனர்.. ஏனோ இடைப்பட்ட காலத்தில் இவை அழிந்துவிட்டது..

யார் இந்த பகவதி என்ற கேள்வியோடு மேலே சென்றால்… குமரிப்பகவதி என்று தென் கோடி மூலையில் கடல் அன்னையாக நின்ற கோலத்தில் பாவாடை தாவணியில் காட்சி தருகிறார்…

குமாரத்தி-குமாரி-குமரி என்றால் ஒரே பொருள் மகள் என்பதுவே…

யாராக இருக்கும்… இந்த மகவதி (இந்திராணி)..?

இந்த நிலத்தில் பிறந்தவள்.. என்று பெயர் கொடுத்து உள்ளனர்.. கால ஓட்டம் வழக்கு மொழி மாற்றம் இவள் பெயர் சிறிது மாற்றம் கண்டுள்ளது…

குமரிப்பகவதி இருக்கும் இடம் குமரித்துறை இது முன்பு துறைமுக நகரங்களை பாக்கம் என்று அழைக்கும் வளமை உள்ளது.. பாக்கம் – கடல் கரை ஊர் என்பதுவே…

குமரிப்பகவதி *குமரிபாக்கம்பதி* குமரி பாக்கத்தின் அதிபதியே…

பெரிபிளசு இவரது காலம்  (கி.பி. 60-80) (Periplus) இவர் தனது பயண குறிப்புகளில் தேவி கன்னியாகுமரி அம்மன் பற்றியும், பிரம்மச்சர்யம் பற்றியும், அன்னையின் வழிபாடு பற்றியும் எழுதி இருக்கிறார். இந்த இடம்  பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

இங்கு ஜீசஸ் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே பெண் தெய்வ வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது…

குமரிபாக்கவதி கடல் அன்னை… இன்றைய தமிழில் 2000 ஆண்டு முந்தைய தமிழை மறந்தோம்.. சொற்கள் பல இழந்தோம்.. சிலப்பதிகாரம் விடை கொடுத்து செல்கிறது குமரிபகவதிக்கு…

*பாரிரும் பௌவத்தி னுள்புக்குப்* *பண்டொருநாள்* *சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே;*

இதில் பௌவம் – பௌவத்தி – பவதி- என்றால் கடல் என்றே குறிக்கப்படுகிறது..

இந்த கடல் அன்னை பற்றிய தரவுகள் பார்பதற்கு முன் சற்று பகவதி நாளான தை பூசத்தை பார்ப்போம்…

இயற்கை வழிபாடுகளில் சூரிய சந்திர வழிபாடு நாம் தொன்றுதொட்டு செய்து வந்துள்ளோம்..

சூரியன் சந்திரன் பூமி என ஒரே நேர் கோட்டில் வந்தால் அது அமாவாசை.. சூரியன் பூமி சந்திரன் என வந்தால் அது பௌர்ணமி..

அமாவாசை அன்று இறந்தோர் எண்ணி வழிபடுவதும்.. பெளர்ணமி அன்று பிறப்போர் எண்ணி வழிபடுவதும் நம் வழக்கங்கள்…

பௌர்ணமி பிறப்போர் வழிபாடு.. ஆம் அன்றைய காலத்தில் அதிக பிரசவம் நடக்கும் நாள் பௌர்ணமி அன்று தான்.. அதற்கு காரணம் உண்டு..

கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் ஆகையால் சுகப்பிரசவம் அக்காலத்தில் அதிகமாக இந்த பௌர்ணமி அன்று நடந்தது..

இந்த ஒவ்வொரு நாளும் ஊர் கூடும் இடமாக நீர்நிலைகள் இருந்தது.. நிலவொளியில்  நீரில் பட்டு வெளிச்சம் அடர்ந்து காணப்படும்.. அதே வேளையில் பௌர்ணமி அன்று இயல்பான நாட்களை விட இரவு  சற்று பிரகாசமாக இருக்கும்…

இந்த காரணத்தினால் பௌர்ணமி நாட்களில் இரவுகளை மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அருகிலிருக்கும் நீர்நிலைகளின் கரைகளில் சென்று பொழுதினை கூடி ஒன்றாக கழிப்பதிலும், வீடுகளிலிருந்து வெளிவந்து மக்கள் கூடி கொண்டாடவும் இந்த வெளிச்சம் பயன்பட்டுள்ளது.

அதே போல் தமிழ் மாதங்கள் பெயருக்கு இந்த பௌர்ணமியே காரணம்..

(உதாரணமாக சித்திரை நட்சத்திரம் வரும் பௌர்ணமி சித்திரை மாதமாகும்.. விசாக நட்சத்திரம் வரும் பௌர்ணமி வைகாசி மாதமாகும்).

அவ்வாறு தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி பகவதிநாள்.. தமிழில் இருந்து சமஸ்கிருதம் தோன்றியது என்பது கூட இதில் இருந்து கண்டுக்கொள்ளலாம்..

ஆம் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி *தைசம் – தைப்பூசம்*

பூசுதை இதுவே தைபூசமானது பூசுதை என்றால் சீதை.. ஏர் கலப்பை இருந்து பிறந்தவள் என்பது நாஞ்சில் என்னும் ஏர்முனை நாடு இங்கு பிறந்த சனகனின் மகளா.. 

தைசம் என்றால் தசமே (பத்து) ஆண்டின் பத்தாவது மாதத்தின் பௌர்ணமி..

இதுவரை  இலக்கியம் காலம் காட்டும் மகளை சற்று இன்னும் பின்னோக்கி சென்று பார்த்தால்.. பௌத்தம் தழுவி செல்ல வேண்டும்..

குமரிப்பகவதி அம்மன் பற்றிய தரவுகள் சேகரிப்பு செய்த போது ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் மற்றும் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயில் பற்றியும் பார்க்க வேண்டும்.

மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது சோட்டானிக்கரை பகவதியம்மன்.. மிக அருகில் கொச்சி துறைமுகம்.. இதற்கு சோதிக்கரை துறைமுகம் என்று முன்பு பெயர் மாசிமகத்தின் பௌர்ணமி சிறப்பான திருவிழா நடைபெறும் என்று இருக்கிறது..

சரி அடுத்து பத்மநாபன் சாமி கோயில் இருக்கும் இடத்திற்கு அருகில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்.. தை மாதம் பொங்கல் அன்று 10லட்சத்திற்கும் மேல் பெண்கள் கூடும் ஒரே கோவில்..

அருகே உள்ள கோவளம் கடற்கரை ஓரமாக நான் இந்த மூன்று கோயில்கள் பற்றிய சிந்தனை.. குமரி பகவதி அம்மன் கோயில் திருவிழா அல்லது அங்குள்ள எதுவும் இங்கில்லை.. இங்குள்ள எதுவும் அங்குமில்லை..

குமரியில் இப்போது உள்ள சில கல்வெட்டுக்கள் மற்றும் அமைப்பு பணிகள் விஜயநகரப் பேரரசின் காலத்தில் கல்வெட்டுகள்..

இந்த அமைப்புகள் கேரளா அனைத்தும் சமீபத்தியவை.. துர்க்கை அம்மன் குருதி வெள்ளி பூசை வழிபாடு மற்றும் மாசி மகம் அம்மனுக்கு சிம்மம் வாகனம் எல்லாம் புதிதாக புகுத்தப்பட்ட ஒன்றே..

இந்த இரண்டு கோயில்கள் நடுவே கொல்லம் சிறப்புமிக்க பாண்டிய துறைமுகம்.. இவ்வூர் மிளகு மூலம் வந்தது என்பதை விட கொல்லர்கள் மூலம் கட்டமைக்கப்பட்டது.. இங்கே பொற்கொல்லர் அதிகம்..

“மாசறு பொன்னே; வலம்புரி முத்தே” என்று பொன்னென முத்தென கண்ணகியை வர்ணித்த கோவலனுக்கு, அந்தப் பொன்னாலாகிய சிலம்பும், அதனுள் இருந்த முத்துக்களும் தன் உயிரை பலி கொள்ளப் போவது தெரியாது.

தன் மனைவி கண்ணகியின் கால் ஆபரணமாகிய பொற்சிலம்புகளில் ஒன்றை விற்கச் சென்ற கோவலன், கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஆடி மாதம் வெள்ளி கிழமை கோவளன் தலை துண்டிக்கப்பட்டு இறந்தான்.. குருதி பூசை வழிபாடு ஒவ்வொரு வெள்ளியும் ஆடி மாதம் கண்ணகி வழிபாடு என இங்கு இருந்துள்ளது..

கண்ணகியை பகவதியாக வழிபாடு செய்து வந்துள்ளனர்… அனைத்து பகவதி கோயிலும் கண்ணகி கோவிலே அதன் வெளிப்பாடு முத்துமாலையிலும் மறுபுறம் சிலம்பிலும் தெரிகிறது..

அப்படியானால் பௌத்தம் காட்டும் கடல் அன்னை 2000 ஆண்டுகள் முன்பு யார்.. ?

மணிமேகலை…

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் கோயில் ஆறுபடுகால் பகவதி கோயிலே…

*ஆறுபடுகால் என்றால் ஆறு இழை ஒட்டியாணம்*

கலை என்பது ஏழு இழைகளால் ஆன ஒரு இடை அணி என்றும், கலாபம் பதினாறு இழைகளால் ஆனது..

மேகலை என்பது ஏழு அல்லது எட்டு இழைகளைக் கொண்டது ..

தொடலை என்பது மணி இழைகளால் தொடுக்கப்பட்டது என்றும் பட்டிகை தங்கம் அல்லது வெள்ளியால் ஆன இடை அணி..

கடலில் மரக்கலம் மூழ்கும் நிலையில் உள்ளவர்களை காக்கும் சக்தி படைத்தவர் இந்த கடல் அன்னை மணிமேகலை. மணிமேகலை தெய்வம்  தென்கிழக்கு ஆசியா முழுமையும்  அறிந்திருந்தது என்றே கூறலாம்.

மணிமேகலா தெய்வம் இந்திய சமுத்திரம் மற்றும் தென்சீன கடலின் பல யாத்ரிகர்களை காப்பாற்றியதாக இதனை சுற்றி உள்ள நாடுகளில் பல கதைகள் மூலமாக நம்பிக்கை உண்டு.

மணிமேகலை காப்பியத்தில் கடலில் வணிகம் செய்ய சென்ற கோவலனின் முன்னோர் ஒருவரை இத்தெய்வம் காத்ததால் தான் கோவலனின் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரான மணிமேகலை எனும் பெயர் சூட்டபட்டது.

அதே போல் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயில் *அன்று சோதிகரை அல்ல வணிகம் செய்யும் சாத்தன் கரை..* இது அன்று சாத்தன்கரை பகவதியம்மன் கோயிலே..இங்கு ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் தை பொங்கல் மற்றும் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயில் மாசி மகம் திருவிழா என தைபூசத்தில் நடந்த அடியார்க்கு உணவளித்து பொங்கல் விழா மாறி உள்ளது..

தை மாதம் வரும் தைபூசத்தில் பகவதி நாள் எதற்காக என்று தேடி போது..

12 மாதங்கள் 12ராசிகள் என்று தெளிவாகிறது.. இந்த 12 மாதம் வரும் பௌர்ணமி எந்த நட்சத்திரம் அதுவே மாதமாக மாறியுள்ளது..

ராசி எப்படி தேடிய போது.. இதற்கு குறியீடு உள்ள அனைத்தும் பிழையே..

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நேரம் அந்தந்த சூரியமாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே தமிழ் புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்..

மேழம்

இடவம்

மிதுனம்

கர்க்கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதனை இரண்டாக பிரிக்கலாம் உத்திராயணம் மற்றும் தட்சினாயணம்

தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம். இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில்லை என்பது ஒரு நம்பிக்கை.

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.

ஆக இந்த இரண்டு கால அளவு தொடக்க மாதமான தை மற்றும் ஆடி மாதத்தில் தவ்வை நோன்பு அக்காலத்தில் இந்த மாதத்தின் 3வது செவ்வாய் அன்று அனைவரது வீட்டிலும் பெண்கள் மட்டுமே கூடும் பண்டிகையாக இருந்தது..

இதில் கண்டிப்பாக பெண்கள் தவிர மற்றவர்கள் அனுமதி கிடையாது.. இதுவே தவ்வை நோன்பு.. இதனை அவ்வை அவ்வையார் உடன் சேர்த்து அவ்வை நோன்பாக மாற்றிவிட்டனர்..

இந்நாளில் வழிபடும் தெய்வமும் இந்த பகவதி அம்மனை தான் பச்சரிசி மாவு வைத்து தேன் சேர்த்து கொலுகட்டை பிடிப்பார்கள்.. முடிவில் மாங்கல்யம் பூஜை செய்து அனைவருக்கும் வளையல் மற்றும் குங்குமம் கொடுத்து விடுவார்கள்..

இந்த நாள் தவ்வை நோன்பு என்பது இன்றைய சீமந்தமே.. இந்த நாளில் பெண்கள் குழந்தைகள் பெறும் போது எவ்வாறு உடனிருக்க வேண்டும் தாயும் சேயும் காப்பாற்றி எவ்வாறு இருவரையும் உயிர் காக்க வேண்டும் என்று பாடம் விரிவாக நடத்துவார்கள்..

இந்த நோன்பின் காரணமாக ஏதோ ஒரு நாள் கொடுக்க பட்ட விடுமுறை.. ஆடி மாதம் முழுவதும் என்று மொத்தமாக மாற்றி கட்டமைக்கப்பட்டது..

இன்றும் ஆடி மாதம் புது மணமக்களை மாதம் முழுவதும் பிரித்து வைத்து விடுகிறார்கள்..

தை மாதம் சூரியன் மகர ராசி உட்புகும் மாதம்.. உண்மையில் இதில் உள்ள குறியீடு தவறு என்று தான் சொல்ல வேண்டும்.. மகரத்திற்கு சுறா ,முதலை,யானை,ஆடு என்பது பிழையான ஒன்று..

மகரம் என்றால் மகரந்த சேர்க்கை நடைபெறும் மாதம் இதுவே.. பூக்கள் பூக்கும் மாதம் தை மாதமே.. இந்த பூக்கள் இனப்பெருக்கம் அடைய தேனீக்கள் பங்கு அளப்பரியது..

ஆம் உலகில் பூக்கள் பூத்து குலுங்கும் மாதம் மகர ராசியில் சூரியன் உதிக்கும் இந்த தை மாதம்…

இம்மாதம் இல்லையெனில் உலகம் என்றோ அழிந்து இருக்கும் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.. தைப்பூசம் பகவதிநாள்.. கற்பகம் (கருப்பகம் – கர்ப்பம்) தேவர்களின் நாள்..

அன்றே தேவர்கள் தலைவியான இந்த பகவதிக்கு நாள் என்று கொண்டாடப்பட்டது.. அவளே இந்த இந்திராணி இந்திரனின் புதல்வி என அனைத்து திசைகளில் வழிப்பட்ட கொற்றவை..

யார் இந்த கொற்றவை பலரும் இந்த இந்திரனின் மகளான சயமகளே கொற்றவை என்பதை மறந்து விட்டனர்.. இவள் கிளி அல்ல கடற்கிளி தனக்கான வைத்திருப்பவள்.. இவள் பறவைகளில் மீன்கொத்தி.. மரங்களில் பொந்துகளில் கூடு கட்டும் மரங்கொத்தி.. கடல் மட்டுமல்லாமல் மரங்களை விழுந்து விழுந்து மக்கள் அன்று கும்பிட காரணமும் இதுவே..

அன்றைய காலத்தில் மக்கள் பயந்தது கடல் சீற்றம் கொண்டு இவள் கடலில் இருந்து மழையாக மாறினால் அந்த பெருவெள்ளம் ஊரை சூறையாடும் கடல் கொந்தளிப்பு கண்டால் சர்வமும் நாசம் என இவளை வழிபடாதவர்கள் அன்று இல்லை என்று தான் கூற வேண்டும்..

கொற்றவை வழிபடுவோர் வெறி கொண்டு ஆடுவது மற்றும் இதன் சடங்குகள் யாரும் செய்வது எளிதல்ல.. இதனை வைத்தே அக்காலத்தில் பெண்கள் எந்த அளவு உடலுறுதி கொண்டு உள்ளனர் என்பதை அறிய முடிகிறது..

இவள் தலையில் இருந்த மகுடமே மான் கொம்புகளால் ஆனது பின்னாளில் இந்திர விழாவும் வழக்கில் இருந்து காணாமல் போனது இது சித்திரை மாதம்.. அதற்கு பின்னால் இந்திரன் மகளான பகவதிக்கு எடுத்த விழாவும் வழக்கில் இருந்து மறைந்தது..

ஆயிழை கண்ணன் என்னும் ஆயிரைகண்ணன் மற்றும் கண்ணாயிரம் இந்திரன்.. பெயர் கொண்டதும் மகளான பெற்றெடுத்த இந்த கன்னி குமரியினால் தான்..

பூதமாக காவிரிப்பூம்பட்டினம் இடத்தில் சாம்பாவதி யாக இருப்பவள் இந்த கொற்றவையே.. காவிரி பூம்பட்டினம் இடத்தில் இருந்து காலம் காலமாக தொன்று தொட்டு குமரி பகுதியில் இடம் பெயர்ந்தனர்.. முக்கியமாக நெய்தல் நிலத்தில் உள்ள மக்கள் மூக்குத்தி கொள்ளும் பழக்கம் உண்டு.. இது சுவாச பிரச்சினை தீர்க்கும் அதே வேளை மூச்சு பயிற்சி என கடலையும் காற்றையும்  வணங்கி வருபவர்கள்..

காதில் உள்ள ஒனப்புதட்டை மற்றும் மூக்கோடு சேர்த்து மூக்குத்தி கொள்வார்கள் இரண்டு புறமும்.. இன்னும் சொல்ல போனால் மூக்கின் நடுவில் புல்லாக்கும் சேர்ந்து.. இது அவர்கள் முகத்தை பாதி மறைத்தே விடும்.. தலையில் முக்காடு போடும் பழக்கமும் அவை சுறுமாடாக மாற்றி கூடை தூக்கி வரவே..

இதனை அரேபியா மக்கள் பின்பற்றியே அவை படுதாவாக மாறியது..

அன்றைய முகத்திரை இன்று தாவணி மேலாடை ஆக மாறியுள்ளது..

அதே போல் காற்றை வணங்க அவர்கள் வணங்கியதும் இதே பகவதியை தான்.. இவள் தலையில் உள்ள கிரீடம் சாம்பார் வகை மான்களின் கொம்புகள்.. இதுவே சாம்பாவதி என்று கொற்றவை அழைக்க காரணமும்..

எயினர்கள் மான் கொம்புகளை தற்காப்பு கலையாக மாற்றினர்.. மறவர்கள் வளரியை பயன்படுத்தினர்..

தைப்பூசம் திருவிழா எதற்காக என்று கேட்டால் பூக்கள் பூக்கும் மாதம் இந்த நாளில் ஒவ்வொரு காய் பழங்களுக்கு அந்த வருடம் விலை நிர்ணயம் செய்வது வழக்கம்.. இன்றும் புளிக்கு இந்த நாளில் விலை நிர்ணயம் செய்வது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது..

இதன் பின்னர் வரும் நாட்களில் தோட்டம் தோப்பு ஆகியவை காவல் காக்க அந்த காவலர்கள் வைத்து வந்ததே காவடியும்..

இதனை பெரும்பாலும் முருகன் வழிபாடு என்று மாற்றியது சமீபத்திய ஒன்று தான்..

இவ்வுலகில் வேல் என்று ஒரு ஆயுதம் இல்லை என்று தான் கூற வேண்டும்.. இம்மாதம் சக்தியிடம் இருந்து முருகன் வேலை வாங்கினார் என்பதும் ஆயுதம் அல்ல.. காரணம் சக்தியிடம் வேல் இல்லை சூலம் மட்டுமே அப்படி இருக்க வேல் எப்படி.. வேல் என்பது ஆயுதமல்ல வேலமரம் என்னும் வேப்பமரமே..

மாமரம் பிளந்து அதில் மயிலும் சேவலும் கொடியாக வாகனமாக கொண்டவர் என்று கூறுவதில்.. மாவிலை வேப்பிலை தோரணம் கட்டுவதே .. மருத நிலத்தின் தோற்றமே ஆறு பொழுதுகள் கணிக்க சேவலும்..மழை அறிய மயிலும்..

அப்படியானால் முருகன் யார்.. நெய்தல் நிலத்தில் வள்ளம் என்ற கைமரம் ஓட்ட தெரிந்த அனைவரும் முருகனே.. *மீனவன் என்றாலும் முருகனே தமிழில்..* குமரி கண்டம் அழிந்த போது அங்குள்ள உழவர்கள் காப்பாற்றி அவர்களோடு திருமண கண்டதே சயமகளான செயந்தியை மணந்தது  திருப்பரங்குன்றத்தில் இருப்பது..

இதுவே கௌமாரம் சக்தி வழிபாடு பின்பற்றவும் காரணம் எனலாம் அனைத்து சக்தி வழிபாட்டில் இருப்பது முருக வழிபாட்டில் வந்ததும் இவ்வாறு தான்..

*செட்டி கப்பலுக்கு செந்தூரான் துனை* என்னும் அளவுக்கு பகவதி வழிபாடு தாக்கம் முருக வழிபாட்டில் இருந்தது.. காத்து கருப்பு பேயாக தான் பகவதியம்மன் மற்றும் முருகனை அக்காலத்தில் வணங்கி வந்தனர்..

இதனை சங்க இலக்கியங்களில் தெளிவாக தெரிகிறது காரணம் கந்தவாகணன் என்று வாயு பகவானாக முருகனையும்.. சயமகளாக  பகவதியம்மனை கடல் அன்னையாக வணங்கினர்..

தொடக்க காலங்களில் தொழிற்குடிகள் மட்டுமே இருந்தன சாதிகள், சாதிப்பிரிவுகள் இல்லவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேலும் அக்காலத்தில் இருந்த குடிகளாக 7 குடிகளை அவர் குறிப்பிடுகின்றார்.

1.   துடியன் ( துடி என்னும் இசைக்கருவியை இசைப்பவர்)

2.   பறையன்(பறை என்னும் இசைக்கருவியை இசைப்பவர்)

3.   பாணர் (பாடகர்)

4.   கடம்பர் (வேளாண்மை செய்வோர்)

5.   வலையர் (மீனவர்)

6.   வணிகர் (வாணிபம் செய்வோர்)

7.   உழவோர் (உழவு பணி செய்வோர்) 

கேரளா சென்ற போது செட்டியார் ஒருவரை புல்வா என்று அழைத்தனர்.. செட்டியார் என்று மலையாளத்தில் கூறுகின்றனர் என்றார்..

புல்வாய் அல்லது புல்வா என்றால் மான் இவர்களை ஏன் அவ்வாறு கூற வேண்டும் என்று தேடினால்..

கொற்றவை முதல் குமரிப் பகவதி அம்மன் வரை மொத்தம் வரலாறு சீட்டு கட்டு போல் கட்டுடைந்தது..

தமிழக வாணியர்கள் போல் பரம்பரை கேரளா வாணியர்களும் தங்கள் இனப் பெயரின் பின் சிலர் செட்டியார் என்ற பின்னொட்டினை பயன்படுத்தி வந்தனர். இவர்களே பின்னர் நாயர் என்ற பட்டம் பின்னர் மாற்றிக் கொண்டார்கள்.. இது கடந்த நூறு வருடங்களுக்கு முன்னர் தான்..

செக்காள செட்டியார்களின் முதன்மை தெய்வம் *முச்சிலத்து பகவதி அம்மன்* ஆவார் இவரின் இன்னொரு பெயர் *அன்னபூர்னேஸ்வரி* ஆகும்.

பிராமணர்கள் ஆதிக்கம் 18ம் நூற்றாண்டில் இருந்ததால் இவள் பிராமண பெண்ணாக சித்தரிக்கபட்டதால் அடையாளம் தெரியாமல் போயிற்று..

கேரளாவில் மொத்தம் 118 முச்சிலத்து பகவதி அம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள் மலபார், காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு என பல பகுதிகளில் விரவி உள்ளன.

கேரள வட மலபார் வாணியர்கள் *முச்சிலத்து காவு* என ஆண்டிற்கு ஒருமுறை தங்கள் குல தெய்வத்திற்க்கு விழா எடுப்பர். இது 3-4 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இத்திருவிழாவிற்கு பெருங்களியாட்டம் என்றொரு பெயரும் உண்டு. அந்த நான்கு நாட்களும் நாள் ஒன்றிற்க்கு ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பெறும்.

வணிகர்கள் மட்டும் அல்ல பட்டு நெய்யும் நெசவாளர்களும் செட்டியார் என்று அழைக்கப்படுகிறது.. இதில் தேவாங்க செட்டியார் என்பதில் தேவாங்கம் என்றால் தமிழில் பட்டு..

இவர்கள் உலகம் முழுவதும் சென்று வந்த கடல் வழி பாதையே பட்டு பாதை..

தவனச்செட்டி என்று ஒரு வணிக குழுவினரின் முன்பு குமரிக்கண்டதில் இருந்தனர் இவர்களே வாசனை திரவியங்கள் உலக அளவில் கொண்டு சென்றனர் அவர்கள் கொண்டு சென்ற வாசனை திரவியம் கொண்ட பூவே மரிக்கொழுந்து.. இதனை *கு-உலகம்* முழுவதும் அறிந்து வைத்தே வந்த பெயரே குமரிக்கொழுந்து..

இதில் அனைவரும் முருகனை பற்றிய கேள்விகள் இருக்கும்.. இதில் முருக வழிபாடு என்று இன்று நாம் காணும் வழிபாடு 2000 ஆண்டு முன் காலத்தில் இதே வடிவத்தில் இல்லை திருமுருகாற்றுப்படை வரை ஆற்றுபடுதலே..

வணிகர்கள் செல்லும் பாதையில் ஓய்வு எடுக்க அக்காலத்தில் பாழி அமைத்தனர்.. ஆறு=நெறி ,வழி ஆற்றுப்படுத்தல்=பொருள் பெற்று மகிழ்ந்த ஒருவன் பெறாதவரும் பெற்று மகிழ வழிகாட்டுதல்.

ஆற்றுப்படை என்றால் என்ன?

ஆற்றுப்படை என்பது தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று .

இதன் இயல்பு யாதெனில், ஒரு வள்ளலிடம் பொருள் பெற்று திரும்புகிற,

பாணர் (இசைக்கலைஞர்)

விறலியர்(பெண் இசைக்கலைஞர்)

பொருநர்

கூத்தர் (நாடகம்).

முதலிய கலைஞர்களுள் ஒருவர், அவ்வழியே செல்லும் தம்மைப் போன்ற கலைஞர்களிடம் அவ்வள்ளல் பெருந்தகையின் கொடையுள்ளம், ஒப்புரவு முதலியவற்றைப் போற்றிப் பாடி அவர்களை ஆற்றுப்படுத்துவது ஆகும்.

பொருநர் குறித்து தெளிவான ஒரு கருத்து நிலவுவதில்லை. பொருநர் என்போர் ஏர்க்களம், போர்க்களம் பாடுவோராக உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூறுகிறார் .

இசை, நடனம்,நாடகம் ஆகியவற்றுள் ஒன்றைத்தான் இவர்கள் புரிவார்கள் என்று கொள்ளக்கூடாது.

சான்றாக, கூத்தர் பாடிக்கொண்டே மெய்ப்பாடு தோன்ற ஆடவுஞ் செய்வர். இதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் இருக்கின்றன.

சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டில்,

பொருநராற்றுப்படை,

திருமுருகாற்றுப்படை,

சிறுபாணாற்றுப்படை,

பெரும்பாணாற்றுப்படை,

மலைப்படுகடாம்

ஆகியவை ஆற்றுப்படை நூல்கள் .

மலைப்படுகடாம் கூத்தராற்றுப்படை எனவும் வழங்கப்படும். ஆக இங்கு முருக வழிபாடு என்று இன்று இருப்பது போல் ஏதும் இல்லை..

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

-சிலம்பு கா. 11 வரி. 18.22

இதில் வடிவேல் என்பது முருகன் கையில் உள்ளது என்று என்று நினைப்பது அதன் பிறகு வரும் வார்த்தை பார்க்க வேண்டும்.. *வான்பகை*. ஆக வெடிவெள் – இடி முழக்கத்துடன் ஒளிபொருந்திய எரிகல்.. *எரி வெள்ளி*

இதனால் இங்கு இருந்த குமரி பகுதியில் கீழ் சில மைல்கள் கடல் நீரில் முழ்கியது..

அதனை குறிக்கும் வழக்கமும் நமக்கு உண்டு.. அதுவே ஏழு கன்னிமார்கள்.. தெற்கு முனை தவிர்த்து மற்ற ஏழு மூலைகள் ஏழு கன்னிகளை குறித்ததும் குமரி கண்டம் அழிவுக்கு பிறகு தான்.. அப்படியானால் தெற்கில் எட்டாவது முனை அழியாமல் இருக்க வேண்டும் அல்லவா?

அந்த எட்டாவது முனை இன்றைய *மடகாஸ்கர்* இதுவே அன்றைய குமரிமுனை.. இதுவும் முழுமையாக இன்று கால ஓட்டத்தில் சிறிய நிலப்பரப்பு தீவாக மாறியுள்ளது..

இதில் இன்னும் குலதெய்வம் வழிபாடு செய்ய அனைவரும் எடுத்து செல்லும் பூவும் இந்த குமரிக்கொழுந்தை தான்.. தவனம் என்றாலும் இந்த குமரிக்கொழுந்து தான் இலைகுமரி என்னும் லெமூரியா.. இந்த குமரிக்கண்டத்தில் இருந்து வந்த வணிக குழு பிரிவினரே தவனச்செட்டி என்னும் ஒரு பிரிவினர்..

குமரிக்கண்டம் மிருகம் யாளி என்பதும் கற்பனை தான் இதனை சுருக்கமாக 4 கால்கள் கொண்ட சிங்க உடலே எங்கும் இருக்கும் யாளி சிலை வடிவம் இதன் பொருள் அமரும் சிம்மாசனம் இருக்கை குறித்தது அதே வேளை அவர்கள் தலைமையில் அணியும் கீரிடம் மாறும் அவை சிங்கத்தின் தலை மகுடம் கொண்டதை

 “சிம்ம யாழி” என்றும்,

காளையின் தலை மகுடம் கொண்டதை

“மகர யாழி” என்றும்,

யானையின் தலை மகுடம் கொண்டதை

 “யானை யாழி” என்றும் கூறியுள்ளார்கள்..

அதற்கு வடிவமே இன்றைய கோயில் தூண்கள்..


ஆக இனி வரும் நாட்களில் முருகன் கோயில்களில் தை பூச திருவிழா நடைபெறும் அதே வேளையில் ஊரில் உள்ள அனைத்து பகவதி கோயில்களிலும் அன்னதானம் வழங்கவும்.. இந்த வரலாற்று நிகழ்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லுங்கள்..

Ref Link

By வசந்த் வெள்ளைத்துரை

Bala Trust

About Admin

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES