கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி குழந்தைகள் சுகாதாரத்துடன் கல்வி கற்க முடியுமா? அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியுமா? என்று ஊர்மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.