Friday , September 20 2024
Breaking News
Home / இந்தியா / கிரிக்கெட் வாரியத் தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் நியமனம்: இனி வாரியத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்!

கிரிக்கெட் வாரியத் தலைவராக இந்தியாவின் முன்னாள் கேப்டன் நியமனம்: இனி வாரியத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்படும்!

ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொகமது அசாருதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கான தேர் தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் நிர் வாகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார் 56 வயதான அசாருதீன்.

முன்னதாக கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். 1990 காலக்கட்டத்தில் இவரது தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உள்நாட்டில் நடைபெற்ற இங் கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர் களை வென்றிருந்தது.

இதன் பின்னர் 2000-ம் ஆண்டில் சூதாட்ட புகாரில் அசாருதீன் சிக் கினார். இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இருப் பினும் அசாருதீனுக்கு எதிரான விசாரணை முறைப்படி நடை பெறவில்லை எனக்கூறி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தர விட்டதுடன் அவர் மீதான வாழ் நாள் தடையை நீக்கியிருந்தது.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சவுரவ் கங்குலி. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரியாக பணியாற்றினார். ஜக்மோகன் டால்மியா காலமான பிறகு, பெங்கால் அணியின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

தற்போது மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு கங்குலியைத் தவிர வேறுயாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாளை நடக்கும் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். கங்குலியுடன் பொருளாளர், இணைச் செயலாளர், செயலாளர்கள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Bala Trust

About Admin

Check Also

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES