Sunday , October 13 2024
Breaking News
Home / அறிவியல் / உண்மையும் பொய்யும்…

உண்மையும் பொய்யும்…

ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன…

நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன…

தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் தான் உண்மை என ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டது…

கிணற்றில் இருந்த உண்மை அம்மனமாக வெளியே வர அதன் ஆடைகளை காணோம் பொய் ஆடையையும் அணிய முடியாது இருந்தாலும் ஊரில் உள்ள எல்லோரிடமும் நான் தான் உண்மை என சொல்லியும் யாரும் நம்பவில்லை கல்லால் அடிக்க தொடங்கி விட்டனர்..
உண்மை மீண்டும் போய் கிணற்றில் ஓளிந்து கொண்டது …

இந்த பொய் ஆனந்தமாக தனது புளுகிமூட்டை கதைகளுடன் மின்னல் வேகத்தில் உலகை சுற்றி வந்தது…

 

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES