Friday , September 20 2024
Breaking News
Home / இந்தியா / கண்ணாடியால் பால்கனி அமைப்பது பாதுகாப்பானதா? சாய்ந்தாலே சல்லி சல்லியா நொறுங்கிப்போகாதா? பணக்காரர்கள் தேடித்தேடி கட்டமைக்கும் இரகசியம்!

கண்ணாடியால் பால்கனி அமைப்பது பாதுகாப்பானதா? சாய்ந்தாலே சல்லி சல்லியா நொறுங்கிப்போகாதா? பணக்காரர்கள் தேடித்தேடி கட்டமைக்கும் இரகசியம்!

வீட்டுக்கு முன்னால் கண்ணாடி மாட்டினால், கண் திருஷ்டி படாதுன்னு சொல்வாங்க. யாராவது வீட்டுக்குள்ளே நுழைந்த உடனே, கண்ணாடியை பார்த்தால், நமக்கு வரும் கண் திருஷ்டி விலகிவிடுமாம். வீட்டு வரவேற்பு அறையில் கண்ணாடி இருப்பதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டதால், விதவிதமாக வீட்டை அலங்கரிக்க வெளிப்புறத்திலும் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஜன்னல்களில், கதவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்ணாடி, தற்போது கைப்பிடி சுவர்கள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு.

ஒரு காலத்தில் கண்ணாடி என்றாலே பயம். உடைந்தது கை, காலை கிழித்துவிடும் என தவிர்த்து விடுவார்கள். வீட்டு கைப்பிடி சுவர்கள் அமைக்கப்பயன்படும் கண்ணாடியில் அந்த சிக்கல் இல்லை. அவை கடினப்படுத்தப்பட்ட கண்ணாடி வகையை சேர்த்தவை. உடைந்தாலும், கற்கண்டு போல சிதறிப்போகும். கை, கால்களை பதம் பார்க்காது. சரி, அதெல்லாம் ஓகே! சிமெண்ட் கலவையில் தரமாக கட்டிய கைப்பிடி சுவரிலேயே, விரிசல் வந்து விடுகிறது. கண்ணாடியை நம்பி எப்படி பால்கனி சுவரில் சாய்ந்து நிற்பது? என்ற சந்தேகம் வரலாம்.

இந்த சந்தேகம் வந்தால், நமக்கு இன்னும் கண்ணாடியைப் பற்றி முழுசா தெரியவில்லைன்னு அர்த்தம். பல்கனியில் பொருத்தப்படும் கண்ணாடி பெயர் பலுஸ்ட்ரேட் கண்ணாடி. பால்கனிகள், படிக்கட்டு, நீச்சல் குளம் இவற்றிற்கு போடப்படும் கண்ணாடி தடுப்புகள், உள்ளிருந்து வெளிப்புறத்தையும்,  வெளியிலிருந்து உட்புறங்களையும் தடையின்றி காண ஏதுவாயிருக்கும். இந்தக் கண்ணாடிகள் அவ்வளவு பலவீனமானவை அல்ல. மால்களில் இதில் 10 பேர் கூட சாய்ந்து செல்ஃபி எடுக்கிறார்கள்.

சீனாவில் பள்ளத்தாக்கின் மேல் அமைக்கப்பட்ட கண்ணாடி தரை பாலத்தில் 200–300 பேர் நடந்து, பயத்தில் உள்ளேயே வழுக்கி விழுந்தும் இம்பேக்ட் தருகிறார்கள். ஆனால் உடைவதில்லை. அப்படியென்றால், இந்த கண்ணாடியெல்லாம் உடையவே உடையாதா? என்று கேட்டால், உடையுங்க!  கண்ணாடிக்கு சரியான இடத்தில் சப்போர்ட் கொடுக்கப்பட வேண்டும். அதன் தெர்மல் எக்ஸ்பேன்சன் மற்றும் கான்ட்ரேக்‌ஷன் கணக்கீடு பார்த்து சரியான முறையில் பொருத்தினால், எந்த நிலையிலும் உடையாது. 

Bala Trust

About Admin

Check Also

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES