மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் எம்.ரத்னம் தலைமையில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வி மாரியப்பன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் கந்தசாமி சிபிஐ எம் எல் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொடர் மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரிசெய்யவேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …