சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள, தள்ளு வண்டி மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது மட்டுமின்றி போக்குவரத்து வாசிகளையும் முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும், அருகில் கைக்குழந்தைகளும், முதியோர்களும் இருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் காவல் சோதனை சாவடிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
இளைஞர் குரல் செய்திகளுக்காக – R விமல்குமார்.