ரூபாய் 30 லட்சம் செலவில் கப்பலூரில் மதுரை ரோட்டரி சங்கங்கள் மூலம் 46 ஆயிரம் மரங்களுடன் மியாவாக்கி குறுங் காடுகள் மதுரையில் உள்ள 8 ரோட்டரி சங்கங்கள் மூலம் ரூபாய் 30 லட்சம் செலவில் 46 ஆயிரம் மரங்களுடன் கூடிய மியாவாக்கி குறுங்காடுகள் கப்பலூரில் உருவாக்கப் பட்டு வளர்ந்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு மதுரை இன்னோ வேட்டர்ஸ் ரோட்டரி சங்கமும் மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்கமும் முன்னிலை வகித்து மற்ற 6 ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள திறந்த வெளி இட ஒதுக்கீடான சுமார் 4.25 ஏக்கரில் ஏறக்குறைய ரூ.30 லட்சம் செலவில் 46,000 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் குறுங்காடாக ஏப்ரல் 2021ல் நட்டு உருவாக்கினார்கள்.
அம்மரக்கன்றுகள் 16 மாதங்களில் 10 சதவிகித வளர்ச்சியை எட்டி ஒரு அடர்ந்த அழகிய வனமாக தோற்றமளிக்கிறதென இத்திட்டத்தின் தலைவர் சசி போம்ரா பெருமிதத்துடன் கூறினார்.
இந்த குறுங்காட்டினை ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் தேர்வு ஆனந்த ஜோதி தியாகராஜா மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர்கள் பார்வையிட்டனர்.
இத்திட்டத்திற்கு மும்பையிலுள்ள சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தங்களுடைய சமூக நல நிதி யிலிருந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளனர். மேலும், விகாஸா பள்ளியின் 1984 மற்றும் 1985 ம் வருட மாணவர்கள் இணைந்து இத்திட்டத்திற்கு ரூ. 5 லட்சம் வரை உதவி புரிந்துள்ளனர்.
இம்மரங்களின் நீண்ட நெடிதுயர்ந்த வளர்ச்சிக்காக முதல் 18 மாதங்களுக்கு நீர் பாய்ச்சல், களையெடுத்தல் மற்றும் கத்தரித்தல் ஆகிய பணிகளை கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் ரோட்டரியுடன் இணைந்து கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் கையெழுத்திட்டுள்ளது என அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. முகேஷ் அகர்வால் குறிப்பிட்டார். பதினாறே மாதங்களில் ஒரு அருமையான அடர்வனம் உருவாகியுள்ளது. அதிலும் சில மரங்கள் 12 அடியிலிருந்து 15 அடி வரை கம்பீரமாக வளர்ந்து உள்ளது
இத்திட்டத்தின் ஆக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.