சர்வ சமய ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார்.
மதுரை அனுஷத் தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் 88 ஆவது ஜெயந்தி விழா மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடை பெற்றது. இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் ‘ குருவே சரணம் என்ற தலைப்பில் பேசினார் அவர் தனது உரையில் பேசியதாவது ஸ்ரீ மகா பெரியவர் என்ற நல்ல குருவின் சிஷ்யராக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் விளங்கி னார்.குரு பக்திக்கு இலக்கண மாக திகழ்ந்தவர் ஸ்ரீ ஜெயந்திரர். நிறைய சத் காரியங்களை ஸ்ரீ ஜெயந்திரர் செய்திருக்கிறார். ஆன்மீக கல்வி சாலைகள் மருத்துவ மனைகள்”, கோவில்கள் சீரமைப்பு, வேத விற்பன்னர் களை கௌரவித்தல், போன்ற நிறைய காரியங் களை செய்திருக்கிறார். சர்வ சமய ஒற்றுமைக்கு இலக்கண மாக திகழ்ந்தவர். குருவின் கட்டளையை ஏற்று எதை செய்தாலும் அது சிறப்பு. யோக சக்தி இருந்தால் நாம் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று காஞ்சி பெரியவர் சொல்கிறார். ஹோமம், யாகத்தை செய்கிற போது அதில் பலன் கிடைக்கும். மந்திரங்க ளில் காயத்ரியும் விரதங்களில் ஏகாதசியும் சிறந்தது. எந்த காரியத் தையும் மனப் பூர்வமாக பக்தியோடு வழிபாடு செய்தால் அங்கு தேவர்கள் வருவார்கள். இன்று ஸ்ரீ மகா பெரியவர் போல ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமி களும் தோன்றாத் துணையாக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.பக்தி மார்க்கத்தில் ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வாச்சாரியார் என்ற குருமார்கள் மூன்று அருள் கொள்கை களை நமக்கு தந்திருக்கிறார்கள். உலகத்தில் குரு வழிபாடு என்பது பாரத தேசத்தில் மட்டும்தான் உள்ளது. குருவின் அருள் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். உலகம் என்பது வீடானால் பாரத தேசம் எனது பூஜை அறை என்கிறார் சுவாமி விவே கானந்தர். இந்தியா வின் யோக கலை உலக மெங்கும் விஸ்வரூபம் இன்று எடுத்து இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய குருமார்கள் குருநாதர்கள் உலகை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆதிசங்கரர் பரமேஸ்வரனின் அவதாரம் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர். இவ்வாறு எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேசினார். முன்னதாக ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமி களின் திரு உருவப்படத்திற்கு கல்யாண சாஸ்திரிகள் தலைமை யில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத் தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந் தார்.