விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக, பதினோரு அடி, ஒன்பது அடி கொண்ட விநாயகர் சிலைகள்,15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி விளக்குத்தூண் வரை விநாயகர் எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை மாநில இளைஞரணி செயலாளர் முனைவர் எம்.டி. ராஜா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்