மதுரை யூசி மேல்நிலைப்பள்ளியில் நடந்த 76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்து சாதனை படைத்த பள்ளி மாணவி (சிலம்பம் இளம் பயிற்சியாளர்) ஹரிணிக்கு உலக சாதனை பெண் என்ற சான்று 76 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், டாக்டர் பாண்டியன் யுசி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சான்று வழங்கி பாராட்டினர்.
மாணவி ஹரிணி ஏற்கனவே தமிழக அரசு விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.