தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அழகர்கோவில் ரோடு சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில்,
உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன் தலைமையேற்று 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட செயலாளர் தல்லாகுளம் ராஜா சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வில் அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் மேலமடை ஐயப்பன்,மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் மானகிரியார், மனோகரன், பி.ஆர்.முருகன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட செயல்வீரர் ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், தெய்வேந்திரன், 31வது வட்டக் கழக செயலாளர் கண்ணன் மற்றும் 31வது வார்டு நிர்வாகிகள் முத்துக்காளை, பாண்டி, அழகர், கண்ணன்,பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், அய்யனார், 33-வது வட்டக் கழக செயலாளர் சசிகுமார், கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், வழக்கறிஞர் அணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி பிரகாஷ், வர்த்தகர் அணி ஜெயபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்