மதுரை பாத்திமா கல்லூரி உள் அரங்கத்தில் கலாம் பாரம்பரிய கலைக்கழகம் நடத்திய பல்லுயிர்களின் வாழ்வியலில், மரங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பர்வதாசனா நிலையில் தொடர்ந்து 30 நிமிடங்கள் மரக்கன்றுகள் தூக்கிய நிலையில் ஒர் அணியும், வீரபத்திராசனா நிலையில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியபடி ஒர் அணியும், புதிய சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் தலைவர் ராஜா மகேந்திரன், மேதகு திரைப்பட கதாநாயகன் குட்டிமணி, விஜய் டிவி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், இந்தியன் சிலம்பம் ஆசான் எஸ்.எம் மணி, உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலக சாதனை படைத்தோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை முனைவர்.நிமலன்.நீலமேகம் மற்றும் நடிகர் குட்டிமணி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியை கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் நிறுவனரும், சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென் மண்டல தலைவருமான முனைவர் சுந்தர் ஒருங்கிணைத்தார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்