மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்துக்களின் ஒற்றுமை தினமாக கொண்டாட்டம் நடைபெற்றது
இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா இணைந்து திருப்பரங்குன்றத்தில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொட்டும் மழையிலும் இந்து ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கு மேற்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக திருப்பரங்குன்றம் சரவணபொய்கை வழியாக செவ்வந்திகுளம் பகுதியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் இலங்கை மட்டகளப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்திரு.சீனிதம்பி யோகேஸ்வரன் ஊர்வத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைதலைவர் பாம்பன் பாலன் சுவாமி, மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென் மாநில தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணா, செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் குமார் மற்றும் அனுமன்சேனா நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்