பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை கிழக்கு மாவட்டம் மூன்றுமாவடி சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கே.வி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குவண்டியூர் மண்டல் தலைவர் திருப்பதி, துணைத் தலைவர் சுபசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வில் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செல்வமாணிக்கம், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பாலமுருகன், கிளைத் தலைவர்கள் முருகவேல், ஜெய்கணேஷ், கூட்டுறவு பிரிவு பாக்யராஜ், நெசவாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பிச்சைமணி, நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வார்டு தலைவர் பன்னீர்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.