Sunday , October 13 2024
Breaking News
Home / செய்திகள் / பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு

பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு

பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை : பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி : பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஒன்றிய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ரூ.150 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஒன்றிய அரசு.

பாஜக அரசு வாங்கிய கடனால் நாட்டின் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் சராசரி ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏறியுள்ளது. பாஜக ஆட்சியில் வாங்கிய கடன் என்ன நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது.? வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதா? விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டதா?. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டதா?. பொதுத்துறை வலுப்பெற்றதா அல்லது பலவீனமடைந்ததா?. பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா?.

இந்த பணம் எங்கே போனது? யாருக்காக செலவிடப்பட்டது? இதில் எவ்வளவு பணம் தள்ளுபடி செய்யப்பட்டது? பெரும் கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடிக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது? இப்போது புதிய கடன் வாங்க அரசு ஏன் தயாராகிறது, கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி போன்ற சுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாஜக அரசு பொது மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல், ஏன் மக்களை கடனில் மூழ்க செய்துள்ளது, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES