Sunday , November 10 2024
Breaking News
Home / Politics / ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை.. கருத்துக் கணிப்புகளுக்கு தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

18ஆவது லோக்சபாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. சுமார் 543 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறும். அது போல் 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. 3ஆவது கட்ட தேர்தல் ஏப்ரல் 20ஆம் தேதியும் 4ஆம் கட்ட தேர்தல் மே 13 ஆம் தேதியும் 5ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும் 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு கட்டங்களாக நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிஸா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் இந்தியாவில் ஆட்சி கட்டிலில் அமர போவது பாஜக கூட்டணியா இல்லை காங்கிரஸ் கட்சியா என்பது தெரியவரும். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை டிவி, பத்திரிகை, ஊடகங்கள் என எதிலும் வெளியிடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதால் கருத்துக் கணிப்புகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES