இளைஞர் குரல் மூலமாக திருப்பூரில் இளைஞர்கள் அரசுடன் இணைந்து திருப்பூர் மக்களுக்கு கொரானா விழிப்புணர்வு, பசிக்கு உணவு அளித்தல் மற்றும் ஏராளமான சேவைகளை செய்வதற்கு அங்கீகாரம் அளித்த திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் காலங்களில் மேலும் சில இளைஞர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வோம் என்றும், இளைஞர்கள் தனியாக சாலையோர ஏழை எளிய மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகள் அளிப்பது மிக்க மகிழ்ச்சியை மனதிற்கு தருவதாகவும் இளைஞர் குரல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திரு விமல் ராஜா அவர்கள் தெரிவித்தார்.
பின்வரும் காலங்களில் இதுபோன்ற மகத்தான சேவையை தமிழகம் முழுவதும் செயல்பட முயற்சி செய்வோம் என்று இளைஞர் குரல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு முகமது அலி கூடுதல் விஷயமாக கூறினார்.