Sunday , September 15 2024
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் இன்று…

கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று 19.01.2020 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொண்டு சென்றனர்.   இந்த நேரத்தில் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களை நினைவு கூற நாம் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த அரிய மருந்தை கண்டுபிடித்து அதற்கான Patent Rights …

Read More »

ஏன், அச்சு ஊடகங்களில் உள்ள சொந்தங்களை, தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள சொந்தங்கள் வேறு பிரித்து பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..??

ஏன், அச்சு ஊடகங்களில் உள்ள சொந்தங்களை, தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள சொந்தங்கள் வேறு பிரித்து பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..?? இதற்கு என்ன காரணம்? அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி ஊடகம் எளிதில் பாமர மக்களை சென்றடைய கூடியது. ஏனென்றால் செய்தித்தாள்கள் கல்வி கற்றவர்கள் மட்டுமே படிக்கப்படுபவையாகும். ஆனால் தொலைக்காட்சி அப்படி அல்ல. தொலைக்காட்சி, வெகுஜன மக்களின் ஊடகம். நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளின் மூலை முடுக்குகளில் எல்லாம், அந்தந்த மக்களின் மொழிகளில் …

Read More »

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்?

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்? கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர்.  அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை. அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை. நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார். தன் உறவினர் அனிருத்தை …

Read More »

அரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் கட்டு என அழைக்கப்படும் சேவல் சண்டை நிறைவுப்பெற்றது. நாமக்கல், கோவை உள்ளிட அண்டை மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சுமார் 25 ஆயிரம் சண்டை சேவல்கள் போட்டியில் களம் கண்டன. தோல்வியுற்ற சேவல்களை அதாவது கோச்சைகளை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளர்களிடம் விதியின்படி ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி, தமிழ் கலாச்சார வரலாற்றில் …

Read More »

நேரு யோகேந்திரா விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மனிதவிடியல் முனைவர் பி.மோகன்

18-01-2020: நேரு யோகேந்திரா விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனிதவிடியல் முனைவர் பி.மோகன். கன்மலை எடிசன்.முனைவர் கார்த்திக் மற்றும் சங்கர்.பிரபாகரன்.ஐயாரப்பன்.பொன்குனசீலன்.அகஸ்டின். நேருயோகேன்திரா திட்ட அலுவலர் மகஷ்வரன்.  

Read More »

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வீரமாக விளையாண்டு வெற்றியை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ரஞ்சித் குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட்டது. அதனுடன் 4 பசு மாடுகளும் வழங்கியது சிறப்பாக இருந்தது.  

Read More »

அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

திண்டுக்கல் ஜன. 17: குஜிலியம்பாறை வட்டம், கோட்டாநத்தம் கிராமம் சேர்வைகாரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர் திரு. அன்பு கென்னித் ராஜ் மற்றும் Sacca Institute of Freight and Tourism நிறுவனர் திரு. வீரபாபு அவர்களும் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை …

Read More »

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி திருச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச்சங்கம் தரைதளத்தில் நடைபெற்றது. திருவள்ளுவர் தினம் என்பது திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது திருநாளன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. எழுத் தமிழ் இயக்க நிறுவனர் அறிஞர் குமாரசாமி, பாவனார் தமிழ் அமைப்பு நிறுவனர் முனைவர் திருமாறன், திருக்குறள் கல்வி …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES